Monday, July 21, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் - தினமணிஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள் - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம் தேதி வெளியிட்டது.

இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர் மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்த நாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம்.

பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழையும், ஜாதி விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர் பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும், "வெயிட்டேஜ்' மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வர வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்:

1. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

2. சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசு மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம்.

Saturday, July 19, 2014

ஆசிரிய சகோதரர்களே.. நண்பர்களே.. அவசியம் பகிரவும்.. பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு உதவவும்..

T.N.T.E.T தேர்வில் வெற்றிபெற்று.. குறிப்பாக
பி.லிட்.. தமிழ் மற்றும் DT.ed. முடிதத்தவர்கள் பெரும்பாலும்
ineligiblity ஆக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.. எனவே T.R.B மீது வழக்கு தொடுத்து stay வாங்க உள்ளோம்.. பாதிக்கப்பட்ட நண்பர்கள் இருந்தால் 
இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.. உதவி காத்திருக்கிறது.. வள்ளிமுத்து..8608432550 இது அநீதிக்கு எதிரான உரிமை போராட்டம்...
TNTET: இதயத்தில் கசியும் இரத்தம் துடைக்கப்படுமா?
விடிவு காலம் எப்போது??? 

இன்றாவது தணியும் நம் தாகம் என்று எண்ணியிருந்த நம் மனம் இன்றும் ஏமாற்றத்தையே அனுபவித்தது. தமிழக முதல்வர், தமிழக மக்களின் தாகம் தீர்த்த பெருமையை இன்று விதி எண் 110 ன் கீழ் வாசித்து அமர்ந்தாக செய்திகள் வாசிக்க படுகின்றது. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் தமிழக விவசாயிகளின் கண்களில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் உறுதியுடன் போராடி 142 அடி தண்ணீர் தேக்குவதற்கு நீதிமன்ற தீர்ப்பாணை பெற்று தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி! தமிழக மக்களின் கண்ணீர் துடைத்த பெருமை நமது முதல்வரையே முழுமையாக சாரும்.

அதே சமயம் தமிழக முதல்வருக்கு, டெட் தேர்வர்களான எங்களின் கஷ்டங்களில் சில துளிகளை விளக்க விரும்புகிறோம் ...

இளைஞர்கள்;

கண்ணில் பல்வேறு எதிர்பார்ப்புகள். இளைஞர்களின் பெற்றோர் பலர் பராமரிக்க வேண்டிய முதியோர்களாக உள்ளனர். தமது அக்கா/தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்த வேண்டிய கட்டாயம்.. பல்வேறு பொறுப்புகள்..

பெண்கள்;
பலருக்கு "திருமண நிச்சயதார்த்தம்" நடந்தும் திருமணம் நின்று போன நிலை. திருமணம் ஆனவர்களின் நிலையோ காண்போர் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். பச்சிளம் குழந்தைகளை பிரிந்து, அந்த குழந்தையின் பசியை கூட ஆற்ற இயலாமல், குடும்ப பொறுப்புகளை மறந்து, உறவுகளை துறந்து, ”பணி நியமனம்” என்பதை மனதில் தேக்கி, புத்தங்களை கண்களில் தேக்கி பட்ட அவஸ்தை அதிகம்.

மூத்தவர்கள்;
சீனியாரிட்டியில் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் என்ற கனவுடன் ,கிடைத்த ஏதோவொரு வேலையை செய்துவிட்டு, படித்திருந்தும் சமுதாயத்திலும், குடும்பத்திலும் போதுமான அங்கீகாரம் இல்லாமல், ”முக்கா கிழவன் ஆனபிறகு, இவங்களுக்கு எங்க வேலை கிடைக்கப்போகுது” என்ற ஏளனப்பேச்சுக்கு இடையிலும் இளையோருடன் போட்டி போட்டு படித்து டெட் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இதோ அறிவிப்பு வரும், அதோ அறிவிப்பு வரும் - என்று ஏங்கித் தவிக்கும் மூத்தவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று "கானல் நீர்" ஆனதென்னமோ உண்மை..


எத்தனையோ துன்பங்களுக்கு மத்தியில் இன்றும் நாங்கள் வாழ்ந்து(?????) கொண்டிருக்கிறோம் .. தரை மேல் பிறக்க வைத்தான் ... எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்றார் - இதய கனி. நீங்கள் எங்களை "கண்ணீரில்" மிதக்க வைக்காதீர்கள்.

அம்மையே, இன்று முழுவதும் கூடுதல் பணியிடம் குறித்து அறிவிப்பு வருமா? பணி நியமன தேதி குறித்து அறிவிக்கப்படுமா? என்று ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்தோம். விதி 110 குறித்து இலட்சம் முறை சிந்தித்திருப்போம். எங்கள் இதயங்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. தாயன்புடன் துடைத்து விடுவீர்கள் என்று, நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

- என்றும் நம்பிக்கையோடு அனைத்து டெட் தேர்வர்கள் சார்பில்,

- ராம் ராம் - மதுரை B+

Thursday, July 17, 2014

டெட் தேர்வாளர்கள் எதிர் நோக்க வேண்டியவை

இனி வரும் இளங்கலை பட்டதாரிகள் மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது. இனி வரும் கல்வியியல் பட்டதாரிகள் 
மிக அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருப்பார்கள். குறிப்பாக PRACTICAL மதிப்பெண் அதிகமாக இருக்கும். ஏற்கனவே முடித்தவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மாற்ற முடியாது. தொலை தூர கல்வி மூலம் முடிப்பவர்கள் கூட தங்கள் மதிப்பெண்ணை அதிகம் பெற வழிகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே முடித்தவர்களுக்கு ஒரே வழி(வலி) தான் உள்ளது. அது டெட் மதிப்பெண்ணை உயர்த்துவது.எனவே இறுதி பட்டியல் கண்ட பின்னர் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே 140 AND ABOVE மதிப்பெண் பெற்றால் மட்டுமே நல்லது.
TNTET: வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்.

வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும்: 
ஆசிரியர் நியமனத்தில் காலியிடம் அதிகம் எதிரொலி அரசு பள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு, பிளஸ்-2, பட்டப் படிப்பு, பிஎட் படிப்பு மதிப்பெண் ஆகியவை குறிப்பிட்ட அளவு சேர்க்கப்பட்டு கட் ஆப் மார்க் 100-க்கு கணக்கிடப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்களில் வரலாறு பாடத் தில்தான் காலியிடங்கள் அதிகம் (3,592).

எனவே, வரலாறு பாடத்தில் கட் ஆப் மார்க் குறையும். அதே போல், ஆங்கில பாடத்தில் 2822 காலியிடங்கள் இருப்பதால் அதற்கும் கட் ஆப் சற்று குறையும்.அதேநேரத்தில், தாவரவியல், விலங்கியல் பாடங் களில் காலியிடங்கள் வெறும் 260 (தலா) மட்டுமே உள்ளதால் அவற்றுக்கு கட் ஆப் மார்க் மிகவும் அதிகமாக இருக்கும். ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒவ்வொரு பாடத் திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற விவரம் தெரிய வில்லை. தேர்ச்சி பெற்றோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போட்டி அமைந்திருக்கும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுபட்டியல் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Tuesday, July 15, 2014

டிஇடி 2ம் தாள் தேர்வு வெயிட்டேஜ் பட்டியல் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ல் தேர்ச்சி பெற்றவர்களின், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இறுதிப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து வெயிட்டேஜ் தொடர்பாக சந்தேகம் இருப்பவர்கள் இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள, தேதியில் தங்கள் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. அதையடுத்து 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தாள் 2க்கான தேர்வில் 4 லட்சத்து 9 ஆயிரத்து 121 பேர் எழுதினர்.

அதில் 713 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். பிறகு அதே ஆண்டில் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 3 லட்சத்து 64 ஆயிரத்து 370 பேர் தேர்வு எழுதி 8,864 பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்தகட்டமாக 2013ம் ஆண்டு நடந்த, தாள் 2க்கான தேர்வில் 4 லட்சத்து 311 பேர் எழுதினர்.42,109 பேர் தேர்ச்சி பெற்றனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்வு இந்த ஆண்டு நடந்தது. அதில் 4,693 பேர் தேர்வு எழுதி 945 பேர் தேர்ச்சி பெற்றனர். மேற்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களில் மொத்தம் 43 ஆயிரத்து 242 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதில் வெயிட்டேஜ் மதிப்பெண் போடப்பட்டன.

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் பெற்றவர்களில் பணி நியமனம் பெறத் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.அதில் பாட வாரியாக காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் இன சுழற்சி முறையில் வெளியிடப்பட்டுள்ளது. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் டிஆர்பி இணைய தளத்தில் தங்கள் பதிவெண்ணை பதிவு செய்து, வெயிட்டேஜ் பற்றி தெரிந்து கொள்ளலாம். வெயிட்டேஜ் தொடர்பாக ஏதாவது மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அந்த நபர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் தேர்வு எழுதிய மாவட்டங்களில் உள்ள மையத்துக்கு நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

எந்த மாவட்டத்தில் சரிபார்ப்பு:
விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மையங்களை சேர்ந்தவர்கள் 21, 22ம் தேதிகளில் விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியிலும், சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டத்தினர் 23, 24ம் தேதிகளில் விழுப்புரம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 24, 25ம் தேதிகளிலும், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தினர் 26ம் தேதி திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளி, மதுரை, தேனி, புதுக் கோட்டை மாவட்டத்தினர் 21, 22ம் தேதிகளிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டத்தினர் 23, 24ம் தேதி மதுரை ஓ.சி.பி.எம் மேனிலைப் பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தினர் 25, 26ம் தேதிகளில் மதுரை, ஓசிபிஎம் மேனிலைப் பள்ளி

சேலம், நாமக்கல், மாவட்டத்தினர் 21, 22ம் தேதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டத் தினர் 23, 24ம் தேதிகளில் சேலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, ஈரோடு, வேலூர், கோவை, நீலகிரி மாவட்டத்தினர் 25, 26ம் தேதிகளில் சேலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நேரில் சென்று ஆட்சேபணை களை தெரிவிக்கலாம். மேலும், 2012, 2013ம் ஆண்டுகளில் நடந்த டிஇடி தேர்வு, 2014ல் நடந்த சிறப்பு டிஇடி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்த்தலில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள் ளது. மேற்கண்ட நபர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் நேரில் சென்று சான்று சரிபார்ப்பு செய்து கொள்ளலாம். இதையடுத்து தாள் 2க்கான இறுதிப் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்.
TNTET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 31 ஆயிரம்பேரின் நிலை என்ன? - அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் மொத்தம் 42 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 11ஆயிரம் பேர் ஜூலை
இறுதியில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மீதமுள்ள 31 ஆயிரம்பேரின் நிலை என்ன, அவர்களுக்கு அடுத்து வரும் பணிநியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுமா என்பது தொடர்பாகஆசிரியர்தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தனியார் பள்ளிகளில் வேலைக்குச் செல்லலாம். அவர்களுக்கு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தங்களது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ளவும், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால்,அவர்களுக்கு அடுத்து வரும் பணி நியமனங்களில் முன்னுரிமை எதுவும் வழங்கப்படாது என அந்த வட்டாரங்கள்தெரிவித்தன

Monday, July 14, 2014

TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?TNTET காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?

சிறுபான்மை மொழிவழி பள்ளிகள், ஆதி திராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை மற்றும் சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் விரைவில் தனியாக பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9. The subject wise vacancy details of School Education Department and Elementary Education Department alone are notified now. The vacancy details of Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC, MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department, Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This Notification is also applicable for all those vacancies.

Wednesday, July 9, 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர் பணிக்கு தேர்வு
பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.
இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று(09.07.14) மேலும் பல அவமதிப்பு வழக்குகள்.

TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில்ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, 
இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள் வேண்டும். என சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மேலும் பல அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.நீதியரசர் ஆர்.சுப்பையா அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கிறன.
TNTET- ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு - தினத்தந்தி செய்தி ,

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் 10 நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாகவும் தகுதி தேர்வு நடத்தி வருகிறது. 3-வது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் 27 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அப்போது தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 60 என்று இருந்தது. பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி மதிப்பெண்ணை இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதை கல்வியாளர்கள், ஆசிரியர் படிப்புக்கு படித்தவர்கள் ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

ஆசிரியர் பணிக்கு தேர்வு

பின்னர் ஆசிரியர் வேலைவாய்ப்புக்கு அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் மட்டும் போதாது. அவர்கள் ஏற்கனவே ஆசிரியர் பயிற்சியில் பெற்ற மதிப்பெண், பள்ளிக்கூட பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகள் சமீபத்தில் முடிவடைந்துவிட்டன. இதைத்தொடர்ந்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றுவருகிறது. யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி விரைவில் முடிவடைந்து இன்னும் 10 நாட்களுக்குள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, July 5, 2014

டி.இ.டி., தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு:வழக்குகள் மீதான தீர்வால் டி.ஆர்.பி., சுறுசுறுப்பு.ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வில், இதுவரை, இறுதி பட்டியல் வெளியாகவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைகளை எதிர்த்து, பல தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), தேர்வு தொடர்பாகவும், இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) தேர்வு தொடர்பாகவும், 70க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிரான வழக்கு, முக்கியமானதாக இருந்தது.டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60 மதிப்பெண்ணுக்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40 மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிடப்பட்டது. இதனால், அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறி, வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், பழைய முறையை ரத்து செய்து, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்க, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார். எந்த முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கலாம் என, தன் உத்தரவில், உதாரணத்துடன் சுட்டிக் காட்டினார்.அதன்படி, தேர்வர் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான அரசாணையும், மே 30ம் தேதி, பிறப்பிக்கப்பட்டது. இது, டி.இ.டி., பிரச்னையில், ஒரு தெளிவை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்வு விடைகளை எதிர்த்து தொடரப்பட்ட, 70க்கும் அதிகமான மனுக்கள் மீது, நீதிபதி நாகமுத்து, இந்த வாரத்தில் உத்தரவுகள் பிறப்பித்தார்.இதன் காரணமாக, டி.இ.டி., தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும், முடிவுக்கு வந்துள்ளன.இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:விடைகள் குறித்து, புதிய உத்தரவு எதுவும் எங்களுக்கு பிறப்பிக்கவில்லை. 'டி.ஆர்.பி., வெளியிட்ட விடைகள் சரியானவை' என, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வு பட்டியலை வெளியிட, இனி, எங்களுக்கு எந்த தடையும் கிடையாது.ஆசிரியர் தேர்வுக்கான, புதிய அரசாணையின் அடிப்படையில், விரைவில், தேர்வு பட்டியலை வெளியிடுவோம். அதற்கான பணிகளை, இப்போதே துவக்கி உள்ளோம்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

Wednesday, July 2, 2014

2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்; அதிகாரப்பூர்வ தகவல்

ஆசிரியர் தேர்வு வாரியம் துணை இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.811/TET/2014, நாள்.17.06.2014ன் படி TNTETல்தேர்ச்சி பெற்றவர்களின் விவரம்
தமிழ் - 9853
ஆங்கிலம் - 10716
கணிதம் - 9074
தாவரவியல் - 295

வேதியியல் - 2667

விலங்கியல் - 405
இயற்பியல் - 2337
வரலாறு - 6211
புவியியல் - 526

மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் : 42084