Wednesday, December 23, 2015

TNTET: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்குஅரசு காலக்கெடு2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு.


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடுவிதிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும்
, பட்டதாரி ஆசிரியர்களும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மத்திய அரசு இச்சட்டத்தை கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி நடைமுறைப்படுத்தியது. தமிழகத்தில் இதுதொடர்பான அரசாணை கடந்த 2011 நவம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. முதலாவது தகுதித் தேர்வு 2012-ல் தான் நடத்தப்பட்டது. சட்டம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 3 முறை இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.மேற்கண்ட சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளிகளில்நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. பல ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனாலும், பள்ளிக்கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருவதாக கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம்
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 ஆண்டு அவகாசம் என்பது மத்திய அரசின் இலவச கல்விச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆகஸ்ட் முதல் கணக்கிடப்படுமா, தமிழக அரசாணை வெளியிடப்பட்ட 2011 நவம்பர் முதல் கணக்கிடப்படுமா என்ற குழப்பம், ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது.தமிழக அரசாணை வெளி யிடப்பட்ட 2011 முதல்தான் அந்த 5 ஆண்டு அவகாசம் கணக்கிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா தற்போது விளக்கம் அளித்துள் ளார். இதுதொடர்பான உத்தரவு பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக் கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆகியோ ருக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, அரசு அளித்துள்ள 5 ஆண்டு அவகாசம் 2016 நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்குள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதுவரையிலும் தேர்ச்சி பெறாவிட்டால் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுமா, ஆசிரியராகப் பணியாற்றும் தகுதியை அவர்கள் இழப்பார்களா என்பது குறித்து அந்த உத்தரவில் எதுவும் கூறப்படவில்லை.

Thursday, December 3, 2015

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு...


மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும்.
வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது.

Saturday, September 19, 2015

CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை


சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான, மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்), 20ம் தேதி நடக்கிறது; மூன்று லட்சம் பேர் எழுதுகின்றனர். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையான ஆசிரியர் பணியில் சேர, முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை சேர, இரண்டாம் தாளையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தத் தேர்வு, ஆண்டுக்கு இரண்டு முறை, மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப் படுகிறது.தேர்வு முடிவு வெளியான தேதியிலிருந்து, ஏழு ஆண்டுக்கு இந்தச் சான்றிதழ் செல்லும். நடப்பு ஆண்டின் முதல் தேர்வு, பிப்ரவரியில் நடந்தது. இரண்டாவது தேர்வு வரும், 20ம் தேதி நடக்கிறது.
சி.பி.எஸ்.இ., அறிவிப்புநாடு முழுவதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர். இந்தியாவில், 77 மையங்களிலும், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்தாள் பிற்பகல், 2:30 மணி முதல், 4 மணி வரையிலும், இரண்டாம் தாள் காலை, 9:30 மணி முதல் நண்பகல், 12மணி வரையிலும் நடக்கும்.
தேர்வு துவங்குவதற்கு, 90 நிமிடங்களுக்கு முன் வந்து விட வேண்டும்; தேர்வு எழுதுவதற்காக நீல மை பேனா வழங்கப்படும்; கணினி வழி ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மட்டுமே எழுத வேண்டும்; தேர்வர்கள் தங்களுடன் பேனா உட்பட, எந்தப் பொருளும் கொண்டு வரக் கூடாது; தேர்வு நேரம் முடிவதற்கு முன், வெளியில் செல்லவும் அனுமதியில்லை. இவ்வாறு சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது

Thursday, September 3, 2015

ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு இல்லை


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பல ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றில் சேர, எட்டு லட்சம் பட்டதாரிகள் காத்திருக்கின்றனர். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் நியமனம் குறித்து, பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையிலோ, அமைச்சர் பதில் உரையிலோ, அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன; இவற்றில், 1.50 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, மத்திய அரசு உத்தரவுப்படி, குறைந்தது, நான்கு லட்சம் ஆசிரியர்கள் தேவை; ஆனால், இதில், 30 சதவீத இடங்களில் ஆசிரியர்கள் இல்லை. காத்திருப்பு: அதேநேரத்தில், ஆசிரியர் பணிக்காக, பி.எட்., மற்றும் எம்.எட்., படித்து விட்டு, எட்டு லட்சம் பேர், தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேர, மாநில அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், இரு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்படவில்லை.
எனவே, பெரும்பாலான பட்டதாரிகள் தகுதித்தேர்வு எழுதி, தனியார் பள்ளியில் கூட சேர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் வரும் முன், தமிழக அரசு, புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வை அறிவித்து, ஆசிரியர்களை நியமனம் செய்யும் என, பட்டதாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேற்றைய பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். போட்டி தேர்வு: சிறப்புபாடங்களுக்கு மட்டும், 1,188 பேர் போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என, கூறப்பட்டு உள்ளது. .
இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'ஆசிரியர் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், புதிய நியமனங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை' என, தெரிவித்தனர். 1,390 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை:பள்ளிக்கல்வி மானியத்தில், அரசின் கொள்கை குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், 76 ஆயிரத்து, 338 பாட வாரியான ஆசிரியர் பணியிடங்களில், 72 ஆயிரத்து, 843 பணியிடங்கள், இதுவரை நிரப்பப்பட்டு உள்ளன. பார்வையற்ற இளங்கலை பட்டம் பெற்ற, 654 பேருக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்க, பயிற்சி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழங்குடியின பட்டதாரிகள், 906 பேருக்கு, 66 லட்சம் ரூபாய் செலவில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி தரப்படும்.மாற்றுத்திறனாளிகளின் இடைநிலை கல்விக்கு, அரசு பள்ளிகளில், 202 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்.
மேலும், சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில், பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி உள்ளிட்டவற்றுக்கு, 1,188 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்; இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித்தேர்வு விரைவில் அறிவிக்கப்படும். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, 530 விரிவுரையாளர் மற்றும் உதவி பேராசிரியர், இன்ஜி., கல்லுாரிகளுக்கு, 192 உதவி பேராசிரியர், அரசு தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கு, 605 உதவி பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன; இவற்றை நிரப்ப, விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளின் நிர்வாக வசதிக்கு, உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், ஆய்வக உதவியாளர் மற்றும் துப்புரவாளர் போன்ற இடங்களை நிரப்ப, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tuesday, August 18, 2015

ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்


ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்
தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்; தனியார் பள்ளிகளில் கூட பணி கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 2010ல், டெட் தேர்வுக்கான நடைமுறைகள் துவங்கின. அப்போதைய, தி.மு.க., ஆட்சியில், டெட் தேர்வு நடத்தாமல், பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் கள் நியமனம் நடந்தது.டெட் தேர்வு நடத்தாவிட்டால், ஆசிரியர்களுக்கு தரப்படும், 50 சதவீத ஊதிய மானியம் கிடைக்காது என, மத்திய அரசு
எச்சரித்தது. அ.திமு.க., ஆட்சிக்கு வந்ததும், 2012 முதல் டெட் தேர்வு கட்டாயம் எனவும், தேர்வில், 150க்கு 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டது.
வழக்கு:
முதல் தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது. அதில், ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதி, 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனால், தேர்வு நேரத்தை, ஒன்றரை மணி நேரத்திலிருந்து, மூன்று மணி நேரமாக மாற்றி, மறுதேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற, 15 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைத்தது.பின், 2013 ஆகஸ்டில், இரண்டாவது டெட் தேர்வு நடத்தி, தேர்ச்சிப் பட்டியல் வெளியான நிலையில், முன்னேறிய வகுப்பினர் தவிர, மற்ற வகுப்பினருக்கு, 5 சதவீத மதிப்பெண் தளர்வை அரசு அளித்தது.இதனால், 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற, 7,500 பேருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு, 82 மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்றனர். பாதிக்கப்பட்டோர், மதுரை உயர் நீதிமன்றக் கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில், இரண்டு இடங்களில் இரு வித தீர்ப்பு வந்ததால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களும், மதிப்பெண் சலுகை பெற்றவர்களும் வேலைவாய்ப்பு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த வாரம் தான், தமிழக அரசு விழித்துக் கொண்டு, மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளது.இந்த பிரச்னைகளால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய, நான்கு, டெட் தேர்வுகளை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்தவில்லை. இதனால், ஆசிரியர் பணியை நம்பி, பி.எட்., மற்றும் டி.எட்., படித்த ஏராளமானோர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
கட்டாயம்:
தனியார் பள்ளிகளில் ஆசிரியராக சேரவும், டெட் தேர்வு கட்டாயம் என்பதால், டெட் தேர்வு எழுத முடியாத, ஏற்கனவே தேர்ச்சி பெறாதோர், குறைந்த சம்பளத்தில் தனியார் பள்ளிகளுக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் பல்வேறு படிப்புகளை முடித்து விட்டு பணிக்காக காத்திருக்கும், 90 லட்சம் பேரில், எட்டு லட்சம் பேர், ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள்.
இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு உத்தரவிட்டால், எப்போது வேண்டுமானாலும் டெட் தேர்வு நடத்தத் தயாராக உள்ளோம்,' என்றனர்.
8 லட்சம் பேர் யார்?
கடந்த முறை 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற முடியாத, 6 லட்சம் பேர், கடந்த, இரண்டு ஆண்டுகளில் பி.எட்., முடித்து உள்ள, 1.8 லட்சம் பேர்,
டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்த, 20 ஆயிரம் பேர் என, 8 லட்சம் பேர் காத்து இருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்கள், டெட் தேர்வு அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

Friday, July 24, 2015

ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண்: விடைத்தாளை மீண்டும் திருத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


ஆசிரியர் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற்றவரது விடைத்தாளை மீண்டும் திருத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த டி.வெள்ளிசுப்பையன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், முதுகலை வரலாறு பட்டதாரி ஆசிரியர் தேர்வை 2013 இல் எழுதினேன். விடைத்தாளில் (ஓஎம்ஆர் சீட்) வினாக்களின் வரிசை எண்ணைக் குறிப்பிட மறந்து விட்டேன். இந்நிலையில், அந்த தேர்வில் எனக்கு பூஜ்யம் மதிப்பெண் அளிக்கப்பட்டு இருந்தது. இதை சரி செய்து விடைத்தாளை திருத்துமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையை அணுகினேன். அவர்கள் மறுத்துவிட்டனர்.எனவே எனது விடைதாளை திருத்தி பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவுக்கு ஆசிரிரியர் தேர்வு வாரியம் சார்பில் அளித்த பதில் மனுவில், மனுதாரர் வினாக்களின் வரிசை எண்ணை ஓஎம்ஆர் படிவத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம். ஏனென்றால் கணினி மூலம் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.அதில் வினா வரிசை எண் இருந்தால் தான் கணினி அதை மதிப்பீடு செய்யும். எனவே மனுதாரரின் தவறு காரணமாக அவரது விடைகள் திருத்தப்படவில்லை. மேலும் தேர்வு முடிந்து ஆசிரியர்கள் பணியிóல் அமர்த்தப்பட்டுவிட்டனர். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது எனக் குறிப்பிட்டிருந்தது.
இதுதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தவறு செய்வது மனித இயல்பு. மனுதாரர் வரிசை வினா எண்ணைக் குறிப்பிடாதது சரி செய்யக்கூடிய தவறு தான். இதற்காக விடைத்தாளை திருத்தமுடியாது என்று கூறுவதை ஏற்க இயலாது. ஒருவேளை மனுதாரர் தேர்வில் வெற்றி பெறக்கூடியவராக இருந்தால் கற்பித்தல் தொழிலில் தகுதியான ஆசிரியரை இழந்துவிடுவோம். எனவே அவரது விடைத்தாளை தேர்வு வாரியம் மீண்டும் திருத்த ஏறபாடு செய்ய வேண்டும். அவர் பெறக்கூடிய மதிப்பெண் அடிப்படையில் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அடுத்த முறை அவரை பணியமர்த்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, May 23, 2015

TNTET : 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் சாத்திய கூறுகள் இருக்கிறது. தகுந்த ஆதரங்களுடன் சிறப்பு பார்வை


வணக்கம் நண்பர்களே,
ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும். ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் தளர்வில் 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தமிழக அரசு.
அதன் பிறகு தேர்வு முடிந்த பின்பு அளிக்கபட்டது என காரணம் காட்டி 5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இறுப்பினும் இவை தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இவற்றில் நாம் எந்த கருத்தும் கூற இயலாது நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. இருப்பினும் சில அடிப்படை ஆதரங்களுடன் கூடிய விவதம் மற்றும் பேச்சு சுகந்திரத்தின் அடிப்பையில் கருத்துக்களை வெளியிடலாம்.
5% மதிப்பெண் தளர்வு ஆசிரியர் தகுதி தேர்வில் அளிக்கப்பட்டது தவறு கிடையாது ஆனால் இடையில் அளிக்கப்பட்டது தான் தவறு என நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு 110 விதியின் கீழ் கொண்டுவந்தவை அவை அரசின் கொள்கை என அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்கும் எனவே பெரும்பாலும் அரசின் முடிவுகளை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கீழ் நீதிமன்றங்களில் ஏற்காத பல அரசின் முடிவுகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது என்பதற்கு பல ஆதரங்கள் உள்ளது. எனவே 5% மதிப்பெண் தளர்வு இனி வரும் தேர்வுகளில் கட்டாயம் இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.
பாண்டிச்சேரி மாநிலம் தமிழ்நாடு அரசின் கல்வியை பின்பற்றியது அதே போல் ஆசிரியர் தகுதி தேர்வையும் பின்பற்றியது. நம் தமிழ்நாட்டில் 5% மதிப்பெண் தளர்வு அகற்றப்பட்டபோது அங்கும் நம்மை பின்பற்றுவதால் 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டது சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி சென்று பண்டிச்சேரி மாநிலத்தில் பணியிடங்களை நிரப்பக்கூடாது 5% மதிப்பெண் தளர்வு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை வாங்கினர்.
பாண்டிச்சேரி மாநிலம் பிறகு மத்திய அரசின் கல்வியை (CBSE) பின்பற்றியது அதன்பிறகு அங்கு பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை பின்பற்றியது அதில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்னிலும் மாற்றம் கொண்டு வந்து 18tt' March,2Ol5 அன்று G. O. Ms. No. 76 என்ற ஒரு புதிய அரசானை ஒன்று வெளியானது அதில்
The Director of school Bducation has further proposed
qualifying marks in CTET for various categories as follows:
Sl.No Category Qualifying marks
1 General Category 6O% ( 90 marks)
2 Most Backward Class 55% (82 marks)
3 Extreme Backward Class 55% (82 marks)
4 Other Backward Class 55% (82 marks)
5 Backward Class Muslim 55% (82 marks)
6 Scheduled Caste 5O% (75 marks)
7 Backward Tribe 5O% (75 marks)
8 Differently- abled persons50% (75marks)
என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது
-இரா.கார்த்திக், B.Lit.,D.T.Ed.,COPA., (Gurukulam)

Tuesday, May 19, 2015

ஆசிரியர் தகுதித் தேர்வு: பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பு மாற்றியமைப்பு


தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது.அதன்படி,
இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆகஸ்ட் 23, 2010-இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறும் ஆசிரியர்களையே 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நியமிக்க வேண்டும். எனினும், இந்தச் சட்டப்பிரிவுகளை அமல்படுத்த 5 ஆண்டுகள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.இந்த நிலையில், ஏப்ரல் 1, 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தப் பணி நியமனத்துக்கு தாற்காலிக அனுமதி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு பணியாற்றிய காலத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.அதே உத்தரவில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதஆசிரியர்களை நியமித்ததில் எந்தத் தவறும் இல்லை. எனினும், இந்த ஆசிரியர்கள் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான மற்றொரு வழக்கில் தனி நீதிபதியின் இந்த உத்தரவு செல்லும் என்றுஉயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.இந்தச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 23-இல் நடைமுறைக்கு வந்தாலும், தமிழக அரசு இந்தச் சட்ட விதிகளை நவம்பர் 15, 2011-இல்தான்வெளியிட்டது.இப்போது, அந்த தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.வழக்குகளால் தாமதம்: கடந்த 2013, ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதன் காரணமாக, 2014-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த வழக்குகள் இப்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இந்த வழக்குகளை விரைவில் முடித்து, இந்த ஆண்டிலேயே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sunday, April 5, 2015

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி....
தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையினை 2 தடவை படித்த பின்னரே இறுதிக்கட்ட விவாதம் நடைபெறும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மே மாதத்திற்குள் முடியும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் தமிழகஅரசு நினைத்தால் விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம். தமிழக அரசு முயற்சிக்குமா?

Friday, March 27, 2015

ஆசிரியர் தகுதி தேர்வு : இலவச பயிற்சி வகுப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுத, இலவச பயிற்சி வகுப்பு நடைபெறஉள்ளதாக,மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் விடுத்துள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில், பி.எட்., முடித்து, 2014 மார்ச், 31ம் தேதி முடிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வழிவகை செய்யும் வகையில், முதல்கட்டமாக சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு தகுதியுடைய மற்றும், 2014ம் ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பி.எட்., முடித்த பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், 2015 மார்ச், 31ம் தேதிக்குள், வேலை வாய்ப்பு பதிவு அட்டையுடன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு தங்களது பெயரை, உத்தம சோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

Saturday, March 7, 2015

பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கூடாது: ஜி.கே. வாசன்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கூடாது: ஜி.கே. வாசன்
தகுதித் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை போன்ற தொழிற்கல்வி கற்பிக்கும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் 16,549 பேர் கடந்த 2012-ஆம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குப் போட்டித் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்யவிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டித் தேர்வு மூலம் 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். போட்டித் தேர்வில் கேள்விகள் சரியாக இல்லை எனக் கூறி அவர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டனர். இப்போது அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தகுதித் தேர்வு மூலம் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழகப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். தமிழக அரசு விலையில்லாமல் வழங்கும் மடிக் கணினி, புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப் பை, சீருடைகள் போன்ற பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும்; அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; ஆசிரியர், அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் பேச்சு நடத்தி ஆசிரியர்களின் பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Thursday, March 5, 2015

வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டு பணியை இழந்த ஆசிரியர்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு...
கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர்; தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்று 2014 ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வெய்ட்டேஜ் என்னும் முறையினாலும் முன்தேதியிட்டு வழங்கிய 5சதவீதம் மதிப்பெண் தளர்வினாலும் பாதிக்கப்பட்டு பணிநியமனத்தை இழந்த பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலப்பொருளாளர் பி.இராஜலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்; படி உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு மனு எழுதும் நிகழ்ச்சியாக காலை 10மணியளவில் சுமார் 10க்கும மேற்பட்ட ஆசிரியர்கள் மனு அனுப்பினர் மேலும் நூற்றுக்கணக்கானோர் அனுப்பி வருகின்றனர்.....
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள 80 நபர்கள் மட்டுமில்லாமல் தாங்களும் தங்களைப்போன்று ஒவ்வொருவரும் மிகுந்த மனவேதனையும் பணிநியமனமும் பாதிக்கப்பட்டோம் மேலும் இனிவரும் ஆசிரியர் தலைமுறையினரும் பாதிக்கப்படுவர் ஆகவே வெய்ட்டேஜின் மீதும் 2013ம் தமிழ்நாடு ஆசிரியர் பணிநியமனங்கள் மீதும் விசாரணை நடத்தி நீதி வழங்கும் படி மனுவின் முலமாக வேண்டிக்கொண்டனர்...
அனுப்பபட்ட மனுவின் விபரம்
From,
N.Venkatesan
S/o Nadarasan
T.G palayam Post
Mangalpuram- via
Rasipuram -Taluk
Namakkal -Dist
Pin-636202
Tamilnadu
To.
Hon'ble Mr. Justice H.L. Dattu..
Supreme Court of India,
Tilak Marg,
New Delhi-110 201 (India)
PABX NOS.23388922-24,23388942-44,
My Lord,
Sub: Requesting the preferences of 90 and above marks in Teachers’ Recruitment Process
I wish to draw your kind attention regarding the above, how I was deceived by breaking rules after the selection processes started. Teachers’ Recruitment Board of Tamil Nadu had announced for conducting Teacher’s Eligibility Test for the year of 2012-13. As per the notification dated 22.05.2013, I had written the Exam on 18.08.2013. As per the instruction mentioned in the notification that 60% or more marks will be declared pass, I had scored 98 marks out of 150. Hence I was declared the TET pass as per the Govt. Notification.
GO 25 dated 06.02.2014:
Meanwhile the TRB had called me for Certificate Verification on 23.01.2014. After the Certificate Verification was over in a satisfactory way, I was full of ambitious to get the Govt. Job. At the time, the Election Commission had announced the Parliament Election. As being considering only vote bank, Tamil Nadu Government announced the 5% relaxation from qualified mark 60% of 150 marks for those who belong to SC,ST,MBC,BC and differently abled persons vide government GO 25 dated 06.02.2014. But the Government left us pathetic by overruling the previous notification dated 22.05.2013. Already more number of candidates were qualified who got 90 and above marks against the less vacancies available. Meantime 5% relaxation of enormous candidates those who obtained the marks of 82 – 89 marks’ were too selected for same less vacancies.
While Honorable High Court was scrutinizing such a GO 25, it was found that it was issued on grounds against both the of Constitutional Act and Government Policy decision. Hence the GO 25 was quashed by Honorable High court at Madurai and permitted relaxation candidate as “if any selection has already been made on the basis of this Government order, persons who were selected for appointment on the basis of the impugned Government order shall not be affected”. As being capitalizing the above statement made by the Honorable Court, the Government issued appointment order by over night to all including more relaxation candidates for available vacancies.
Weightage Marks:
Apart from the above, as per the NCTE guidelines, the Government had implemented the Weightage marks that should be accounted with TET marks for recruitment process. This system is benefitted to only those who completed academic qualification with degree recently, because of the education system is being changed time to time. Though we had an enough experience by old education system, and matching the same qualification for teaching, we are abruptly ignored by this system. This is not our fault of changing the education system from earlier version. Hence this Weightage system too leaves us as a curse while comparing new and old education system as one and same for the recruiting process.
By the both way GO 25 as well as Weightage System pushed us to corner and secluded in a selection process. The retrospect effect of the date of the GO 25 only was deprived us from getting the Government Job.
Hence I request your good self to consider our pathetic situation and justify for offering more preference to the candidate those who get 90 and above marks in TET as per the Government Notification dated 22.05,2013.
Thanking you.
Yours faithfully
N.Venkatesan
Date:02.03.2015
Place: T.G.Palayam
Article By...
பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்
செல்: 95430 79848

Thursday, February 19, 2015

TET குறித்த தகவல்
என் இனிய நண்பர்களே.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை விரைவில் நடத்தி முடிக்க இருதரப்பும் தயார்நிலையில் உள்ளனர்.
எனவேதான் மார்ச் 26 ல் வரிசைபடுத்தப்பட்ட வழக்கின் விசாரணை திருமதி.லாவண்யா அவர்களின் வழக்குறைஞர் திரு.G.S. chennai அவர்கள் வழக்கின் அவசரத்தை நீதியரசர் திரு. இப்ராகிம் கலிஃபுல்லா அவர்களிடம் எடுத்துரைத்து தற்போது வழக்கு மார்ச் 9 அன்றே வரிசைபடுத்தப்பட்டுள்ளது. எஎனவே மிக விரைவிலேயே வழக்கு இறுதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
யாருக்கும் பாதிப்பில்லாமல் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மனஉளைச்சலில் இருக்கும் என் இனிய நண்பர்களுக்கும் பணி கிடைக்கும் நல்ல தீர்ப்பாக அமையவேண்டும்.
புதிதாக PG Trb ஏதும் தற்போது வராது.
ஒருவேளை பட்ஜெட்டில் அறிவிப்பு வந்தாலும் மிகவும் சொற்ப இடங்களே இருக்கலாம் அதற்கும் வாய்ப்புகள் குறைவே.
நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.
பணிநியமனமும் புதிதாக நடக்காது.
By: Mr. Vijaya Kumar Chennai
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்வு வழக்கு மார்ச் 26 விசாரணைக்கு வருகிறது
SUPREME COURT OF INDIA
Case Status Status : PENDING
Status of : Special Leave Petition (Civil) 29245 OF 2014
V. LAVANYA & ORS. .Vs. THE STATE OF TAMIL NADU & ORS.
Pet. Adv. : MR. T. HARISH KUMAR
Subject Category : SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT
Appealed Against : WA 1031/14 OF HIGH COURT OF MADRAS
Listed 1 times earlier Likely to be Listed on : 26/03/2015
Case Hearing Full details:
ITEM NO.89 REGISTRAR COURT. 2 SECTION XII
S U P R E M E C O U R T OF IND I A
RECORD OF PROCEEDINGS
BEFORE THE REGISTRAR M K HANJURA
Petition(s) for Special Leave to Appeal (C) No(s). 29245/2014
V. LAVANYA & ORS. Petitioner(s)
VERSUS
THE STATE OF TAMIL NADU & ORS. Respondent(s)
(with appln. (s) for permission to place addl. documents on record
and interim relief and office report)
WITH
SLP(C) No. 29353-29354/2014
SLP(C) No. 29634/2014
SLP(C) No. 29715/2014
SLP(C) No. 32238-32239/2014
SLP(C) No. 32240/2014
SLP(C) No. 32241/2014
SLP(C) No. 34568/2014
(With Office Report)
Date : 19/01/2015 This petition was called on for hearing today.
For Petitioner(s) Mr.A.Lakshminarayanan,adv.
Mr. T. Harish Kumar,Adv.
Mr. Anandh Kannan N.,Adv.
Ms.Vandana Sinha,adv.
Mr. L. K. Pandey,Adv.
Ms.Manju Aggarwal,adv.
Mr. Satya Mitra Garg,Adv.
For Respondent(s)
UPON hearing the counsel the Court made the following
O R D E R
SLP(C) No.29245, 29353-354, 29634,32238-239, 32240, 32241 & Signature Not Verified
34568/2014 Digitally signed by Sushma Kumari Bajaj Date: 2015.01.21 10:11:13 IST Reason: In all the matters numbered above, Ld.counsel for the petitioners shall within a period of four weeks file the affidavit
.........2 ITEM NO.89 -2-
in proof of dasti service of notice already issued to the respondents.
List again on 26.03.2015.
SLP(C) No.29715/2014
The office report indicates that service of notice is complete on the respondents, but no one has entered appearance on their behalf. Viewed thus, the matter shall be processed for listing before the Hon'ble Court as and when the connected ones get ready.
(M K HANJURA)
Registrar
SB
Thanks To Sankar