Saturday, September 20, 2014

TNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறTNTET - கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் இருப்பவர்கள் தொடுத்த வழக்கு - தகுதிதேர்வு எழுதவேண்டுமா? - சுப்ரீம் கோர்டில் செவ்வாய் கிழமை வருகிறது

கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு மூன்று வருடம் கழித்து 2013 ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. அந்த தீர்ப்பில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த அனைவருக்கும் தகுதி தேர்வு எழுத கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி நியமணம் செய்யவேண்டும் என அமர்வு அதிரடி தீர்ப்பு கொடுத்துள்ளது.

இதற்கு விளக்கமளித்த சோமையாஜீ தற்பொழுது காலி பணியிடம் இல்லை எனவும், இனி வரும் காலங்களில் காலி பணியிடம் உருவாகும் போது அவர்களை பணியமர்த்துவதாக உறுதி அளித்தார்.
மேலும் மூன்று மாதம் கடந்த பிறகு அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மேல் முறையீடு செய்தது. வரும் செவ்வாயன்று சுப்ரீம் கோர்ட் அமர்வில் இறுதி முடிவு என்று முதல் ஐட்டமாக வருகிறது. ஏற்கென்வே அமர்வில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்பதால் தீர்ப்பு கொடுப்பது எளிது. தீர்ப்பு வரும் பட்சத்தில் உடணடியாக அவர்கள் பணிநியமனத்திற்கு ஸ்டே வாங்கி விடுவார்கள்.து
TNTET - வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது.

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில்ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் 'வெயிட்டேஜ்' முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ் முறையின்படி, ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், அவர்கள்கல்லூரி மற்றும் பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிட்டு, ஆசிரியர்கள்தேர்வு செய்யப்படுகின்றனர். வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆஜராகி ஆசிரியர் பணிக்கு கல்வி, திறமை மற்றும் அறிவியல் ரீதியானதேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த முறையை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்விதிகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இந்த முறையை பின்பற்றுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை'என்று வாதாடினார்.

மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பலர் ஆஜராகி, கடந்த 2000ம்ஆண்டுக்கு முன்புள்ள தேர்வு முறைக்கும், அதன்பின்புள்ள தேர்வு முறைக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளிலும் மதிப்பெண் வழங்குவதில் பெரும் வித்தியாசம் உள்ளது. பழைய முறையில் மனுதாரர்கள்படித்தனர். குறைவான மார்க் பிளஸ் 2 தேர்வில் கிடைத்தது. தற்போது முறையில் படிப்பவர்கள் அதிகமான மார்க்பெற்று விடுகிறார்கள். எனவே அவர்கள் அதிகமான வெயிடேஜ் மார்க் பெற்றுவிடுகிறார்கள். எனவே, வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யவேண்டும் என்றுவாதாடினார்கள்.

இதே போன்று 5% தளர்வு குறித்து ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் நடைபெற்றன. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இதற்கிடையில் இவ்வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதக்கருத்துகளை எழுத்துபூர்வமாக வரும் புதன் கிழமைக்குள் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் ஏறத்தாழ 500 பக்க அளவில் தங்கள் வலுவான கருத்துகளை தயாரித்து வருகின்றனர் என செய்திகள் வெளியாயின.

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை(22..09.14) காலை தீர்ப்பு வழங்கப்படுகின்றது. இத்தீர்ப்பினை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுநியமன கலந்தாய்வில் கலந்துக்கொண்ண்டவர்களும், அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களும் பரபரப்போடு எதிர்நோக்கியுள்ளனர்

Friday, September 12, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண குழு: அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

அமைச்சர்கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் 71ஆயிரம் ஆசிரியர்காலியிடம் இருந்தது.அதன்பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 53 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாகநியமனம் செய்தார்.தமிழ்நாட்டில் விரைவில்14 ஆயிரத்து 700ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் மாவட்டம் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் 4 சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகம் பெற்றுள்ளது.வரும் கல்வியாண்டில் வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் முதல்10 இடங்களுக்குள் வரநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படிகுழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்.

Sunday, September 7, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்; யார் எழுதக் கூடாது ******************************************************************
ஆசிரியர் தகுதித் தேர்வை, யார் எழுத வேண்டும்; யார் எழுதக் கூடாது' என்பது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, இரு துறைகளின் இயக்குனர்கள், தெளிவான உத்தரவை பிறப்பிக்காததால்,
பணி நிரந்தரம் ஆக முடியாமல், ஏராளமான ஆசிரியர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில், 2012ல், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. இந்த தேர்வை யார் எழுத வேண்டும்; யார் எழுத தேவையில்லை என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம், பலமுறை தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.அதன்படி, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வு குறித்து, அறிவிப்பு வெளியான, 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின், புதிய ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகி, அதன்பின்
பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கண்டிப்பாக, டி.இ.டி., தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், மேற்கண்ட தேதிக்கு முன், பணி நியமன அறிவிப்பு வெளியாகி, பணியில் சேர்ந்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.
அதேபோல், 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முன், புதிய ஆசிரியர் தேர்வு குறித்தஅறிவிப்பு வெளியாகி, மேற்கண்ட தேதிக்குப் பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை.இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக பணியில் சேர்ந்த, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர் அனைவரையும், டி.இ.டி., தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால் தான், பணி
நிரந்தரம் செய்வோம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும், இழுத்தடிப்பாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறியதாவது:டி.ஆர்.பி., உத்தரவை, அதிகாரிகளிடம் காட்டினாலும், அதை, அவர்கள் ஏற்பதில்லை. 'எங்களுக்கு, எங்கள் துறை இயக்குனரிடம் இருந்துதெளிவான வழிகாட்டுதல் உத்தரவு வர வேண்டும்; இதுவரை வரவில்லை. வந்தால் தான், அதன்படி செயல்பட முடியும்' என, கூறுகின்றனர்.இதனால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணி நிரந்தரம் ஆக முடியாமல் தவித்து வருகின்றனர். இது, முக்கியமான பிரச்னை என்பதால், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள், டி.இ.டி., தேர்வு குறித்த வழிகாட்டுதல் உத்தரவை, உடனடியாக, மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, பேட்ரிக் தெரிவித்தார்
TET 2013 ஆன்லைனில் சான்றிதழ் வெளியீடு

கடந்த 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழை, பதிவிறக்கம் செய்துகொள் ளும் வகையில் ஆன்லை னில் டிஆர்பி வெளியிட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது. இதில், 27ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி அடைந்தனர். அதன்பின், கடந்த ஜன. 10ம் தேதி விடைகளில் மாறுதல் செய்யப்பட்டதில் கூடுதலாக 2 ஆயிரத்து 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, இடஒதுக்கீடு முறையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தமிழக அரசு குறைத்ததையடுத்து மேலும், 42 ஆயிரத்து 647 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தேர்ச்சி அடைந்தவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரமாக உயர்ந்தது.
இவர்கள் அனைவருக் கும் பகுதி, பகுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்தது. தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வெயிட்டேஜ் அடிப்படையில் பெறும் கட்&ஆப் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியர் பணி வழங்கப் படும் என அறிவிக்கப்பட்டு, கட்&ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 2013ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற (முதல் மற் றும் 2ம் தாள்) அனைவருக் கும் ஓராண்டிற்கு பின் டிஆர்பி இணையதளத்தில் தேர்ச்சி சான்றிதழ் வெளியிடப்பட்டது.
தகுதி தேர்வு பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, டிஆர்பி இணையதளத்தில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களை கலராக (வண்ணம்) பிரின்ட் எடுத் துக் கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழை பதிவிறக்கம் செய்தவர்கள், அதில் ஏதாவது பிழைகள் இருப்ப தாக அறிந்தால் டிஆர்பியை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 7 ஆண்டுகள் தகுதி உடையதாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த சான்றிதழ் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
தகுதிகாண் மதிப்பெண் முறை: ரத்து செய்யக் கோரிக்கை

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரியுள்ளது.
இது தொடர்பாக அந்தக் கழகத்தின் தலைவர் பி.இளங்கோவன் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பணி அனுபவத்தை மட்டுமே ஆசிரியர் நியமனத்துக்கான தகுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால், தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கை, கடந்த சில ஆண்டுகளில் பிளஸ் 2 முடிப்பவர்களுக்கே நிச்சயம் சாதமாக இருக்கும்.
அதோடு, பட்டப்படிப்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவரையும் ஒரே அளவுகோலில் கருதுவது சரியானதாக இருக்காது.
எனவே, ஆசிரியர் நியமனத்துக்கான தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.
TET 2013 குறித்த பிரச்சினை முடிந்த பிறகே, புதிய டெட் குறித்த அறிவிப்பு?
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.

என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

சிக்கல்:

கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பட்டதாரிகள்:

இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்