Sunday, June 29, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மே 21-ஆம் தேதி நடந்தது. அந்தத் தேர்வில் நான் பங்கேற்றேன்.

அந்தத் தேர்வில் நான் 81 மதிப்பெண்கள் பெற்றேன். அந்தத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த 33-ஆவது கேள்விக்கு கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு என்ற கேள்விக்கு டி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட சமுத்திரம் என்பதை பதிலாக அளித்தேன். ஆனால், அந்தக் கேள்விக்கு எனக்கு மதிப்பெண் வழங்கவில்லை.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்த விடையில் 33-ஆவது கேள்விக்கு, பி என்ற வாய்ப்பில் கொடுக்கப்பட்ட ஆழி என்பதுதான் சரியான விடை எனத் தெரிவித்தது. அதற்கு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். எனவே, எனக்கு உரிய மதிப்பெண் வழங்கி பணியில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என கோரினார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின்போது, தமிழில் நிபுணத்துவம் பெற்ற பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தமிழ் ஆசிரியர்கள் 3 பேரிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் ஆழிதான் சரியான பதில் எனத் தெரிவித்தனர். மேலும், சமுத்திரம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றும், வடமொழி சொல் எனவும் தெரிவித்தனர். அதனால், சமுத்திரம் என்பது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடலினை மட்டும் குறிக்காத சொல்லைக் கண்டெடு... என்ற கேள்விக்கு, 4 வாய்ப்புகளாக (ஏ) முந்நீர், (பி) ஆழி, (சி) பரவை, (டி) சமுத்திரம் என கொடுக்கப்பட்டன. இதில், (பி) ஆழிதான் சரியான பதில். அந்தச் சொல்லுக்கு, மோதிரம், சக்கரம், கடல் என்று 3 வெவ்வேறு பொருள்கள் உண்டு என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ..சமுத்திரம்... என்ற சொல்லுக்கு கடல், ஓர் எண், மிகுதி என்ற வெவ்வேறு பொருள்கள் உண்டு எனவும், சென்னைப் பல்கலைக்ழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் அகராதியில் கடல், பேரெண், மிகுதி என பொருள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வேறு 2 தமிழ் அகராதிகளிலும் இது போன்ற பதில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

நீதிமன்றம் நியமித்த தமிழ் நிபுணர்கள், "சமுத்திரம்' என்பது வடமொழிச் சொல்.

அதனால், அது சரியான பதில் இல்லை எனத் தெரிவித்தனர். "சமுத்திரம்' என்பது தமிழ்ச் சொல் இல்லையென்றால், தமிழ் அகராதியில் அந்த சொல் இடம் பெற்றிருக்காது. ஆனால், தமிழ் அகராதியில் அதற்கு 3 பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில் முழுவதும் (நான்கும்) சரியானது இல்லை. அதேபோல் மனுதாரருக்கு எந்த ஒரு நன்மை வழங்கினாலும், அது தொடர்பான மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட 33-ஆவது கேள்விக்கு பி மற்றும் டி பதில் அளித்திருந்த அனைத்து தேர்வர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து விடைத்தாள்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுமதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும். இந்த பணியை ஒரு வாரத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, June 26, 2014

ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ் மார்க்’
அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட்டில் மனுதாக்கல்

புதுக்கோட்டையை சேர்ந்த பிரபாகர். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்எஸ்சி, எம்எட் முடித்துள்ளேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளேன். கடந்தாண்டு நடந்த டிஇடி தேர்வில் 84 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். கல்வித்துறையின் சார்பில் கடந்த மே 30ம் தேதி அரசாணை எண் ‘71’ வெளியிடப்பட்டது. அதில், டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு 100 வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2விற்கு 10, டிகிரிக்கு 10, பிஎட் 15 என தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்த முறையால் 10 ஆண்டுக்கு முன் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இதே போல் டிகிரி பாடத்திட்டமும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுகிறது. தன்னாட்சி கல்லு£ரிகளிலும் பாடத்திட்ட முறை மாறுபடுகிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ரவிசந்திரபாபு விசாரித்தார். மனு குறித்து பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், தொடக்ககல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தார்
ஆசிரியர் தகுதித் தேர்வு என்றொரு கண்ணாமூச்சி ஆட்டம்!
by TAMIL HINDU

அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து சிக்கல்களையும், குழப்பங்களையும் கொண்ட ஒரே போட்டித் தேர்வு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வாக மட்டுமே இருக்க முடியும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தகுதித் தேர்வுகள் வைத்து கண்டறியப்பட்டு, பணியிலமர்த்தப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானபோது, பரவலான வரவேற்பை பலரிடம் பெற்றது. வெறும் பட்டப்படிப்பும் பட்டயப்படிப்பும் மட்டுமே ஆசிரியருக்கானத் தகுதியாக நிலவிவந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உறுதியானது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லாதவை என்ற குரல்களும் பல ஆசிரியர்கள், கல்விச் சங்கங்களில் இருந்து வெளிவந்தன. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளிவரும் வரை, இந்த நிலையில் பெரிய மாற்றம் இல்லை. அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே குழப்பங்களும், குளறுபடிகளும் ஆரம்பித்தன.

முதல் குளறுபடியாக, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைகள் வழங்கப்படாமல் இருந்ததில் துவங்கியது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நெருங்கிய உறவினர்களாக கருதப்படும் தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (SET) போன்றவற்றில்கூட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண்களில் சலுகைகள், அவை தொடங்கிய நாளிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (29-06-2014) நடக்கப் போகும் தேர்வு வரை பின்பற்றப்பட்டு வருகிறது.

மாநில அளவில், ஆராய்ச்சியாளர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் நடத்தப்படும் தகுதித் தேர்விலேயே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் போது, ஆசிரியர்களுக்கானத் தகுதித் தேர்வில் திறமை மட்டுமே முக்கியம், இடஒதுக்கீடு திறமையையும் தகுதியையும் குறைத்துவிடும் என்ற அரதப்பழசான சொத்தை வாதம் முன் வைக்கப்பட்டது.

(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறது என்ற கூச்சல்காரர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு தகவல். ஒரு சமூகம் பல நூறு ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்டு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தால், அங்குச் சமநிலையை உருவாக்க ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதுதான் சமூக நீதி. இந்தச் சமூக நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. அமெரிக்காவில் 'சீர்திருத்தச் செயலாக்கம்' (Affirmative action அல்லது positive discrimination) என்ற பெயரிலும், positive action என்ற பெயரில் இங்கிலாந்திலும், employment equityஎன்ற பெயரில் கணடாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட இவை முன்னேறிய நாடுகளே).

இரண்டாவது குளறுபடி, முதல் முறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் குறைவான நேரம் வழங்கப்பட்டது. 150 வினாக்களுக்கு 90 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்பட்டது. அதாவது ஒரு வினாவை அரை நிமிடத்திற்குள் படித்து, அதற்கு விடையை யோசித்து விடைத்தாளில் குறிக்க வேண்டும். இப்படி ஆசிரியர்களின் தகுதியை கண்டறிய வைக்கப்பட்டத் தேர்வு, ஆசிரியர்களின் சிந்திக்கும், செயல்படும் வேகத்தை கண்டறிவதற்கு வைக்கப்பட்டத் தேர்வாக மாறியது. நுண்ணறிவைச் சோதிக்க உளவியலாளர்கள் நடத்தும் சோதனை முறைகளில் கூட இப்படி சிந்திக்கும் வேகத்தை அளவிடக்கூடிய சோதனைகள் இருக்கிறதா தெரியவில்லை. இதுவரை இல்லாமல் போனால், உளவியல் மருத்துவர்கள்தான் இதனை முன்னெடுக்க வேண்டும்.

இந்த நேரக்குளறுபடியும் கடினத்தன்மையும் வரலாறு கண்டிராத ஒரு தேர்ச்சி விகிதத்தை அந்தத் தகுதித் தேர்வில் காட்டியது. சுதாரித்த அரசு, உடனே ஒரு துணைத் தேர்வை நடத்தியது. பொருளாதாரக் கோட்பாடுகளில் ஒன்றான தேவை - இருப்பு (Demand - Supply) கோட்பாட்டின் காரணமாக ஆசிரியர்களின் சிந்தனை வேகத்தை அளவிடாமல், அவர்களின் தகுதியைச் சோதிக்கும் வகையில் அந்தத் துணைத் தேர்வு நடத்தப்பெற்றது.

மூன்றாவது குளறுபடியாக சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) என்ற பெருங்குழப்பம் விளங்கியது. ஆனால், முதல் இரண்டு தகுதித் தேர்வுகளிலும் தேவையை விட இருப்பு குறைவாக இருந்ததால் இந்தக் குளறுபடி தலையெடுக்கவே இல்லை. ஆனால், மூன்றாவதாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் (2013ஆம் நடத்தப்பட்டது) தீராத தலைவலிச் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.

இதுவரையிலான குளறுபடிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பெருங்குளறுபடிகளை 2013ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கொண்டு இன்று வரை தீராத் தலைவலியாக இருந்து கொண்டிருக்கிறது. நேரம் ஏற்கெனவே சரி செய்யப்பட, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குச் சலுகை மதிப்பெண்கள் இல்லை என்ற அறிவிப்போடு தேர்வு நடைபெற்றது.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5ஆம் தேதி வெளிவந்தது. விடைகளில் ஏற்பட்ட குழப்பங்கள் சரி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் 11-01-2014 அன்று வெளியானது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளும் ஜனவரி 2014ல் முடிந்தது, தமிழக முதல்வரின் பிறந்த நாள் அன்று இவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்று வாய்மொழியாகத் தகவல் வெளிவந்தது.

மூன்று முறை நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்புகளிலும் இந்த மதிப்பெண் சலுகை பற்றி அறிவிக்கப்படவே இல்லை, 2012 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், ஆசிரியர் தேர்வு வாரியமும் விடாப்பிடியாக இட ஒதுக்கீடு தகுதியைக் குறைத்துவிடும் என்றே பல இடங்களிலும், நீதிமன்றத்திலும் வாதிட்டு வந்தனர். அடுத்த ஒரு மாத இடைவெளிக்குள்ளாகவே கல்வியாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரது நீதிமன்ற செயற்பாடுகள், போராட்டங்கள் ஆகியவை மூலமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. இதுவரை சலுகை மதிப்பெண்கள் தகுதியைக் குறைத்து விடும் என்று வாதிட்ட அரசு, ஐந்து சதவீதம் சலுகை வழங்கப்பட்டால் 82.5 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற கணக்கீடுகளுக்குப் பதிலாக 82 மதிப்பெண்கள் பெற்றவர்களும் தேர்ச்சிபெற்றவர்கள் என்றே அறிவித்தது.

இவ்வாறு கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை வெகு வேகமாக செயல்படுத்த முடியாத அளவுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பணியாளர்கள் பற்றாக்குறை, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளும், தேர்தல் நடத்தை விதிகளும் என்று பல காரணங்களால் இந்தப் பணிகள் தள்ளிப் போனது.

இதற்கிடையில் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் (Weightage Marks) குளறுபடி இந்தாண்டு தேர்வில் பெரியளவில் குழப்பத்தை விளைவிக்க தேர்வு எழுதி ஓராண்டு ஆகப்போகும் நிலையிலும் இதுவரை பணி நிரப்பப்படாமல் உள்ளது. அரசு அறிவித்த சிறப்பளிப்பு மதிப்பெண்கள் கணக்கிடும் முறையானது இதுவரை புள்ளியியல் கண்டிராத உத்திகளைக் கொண்டிருந்தது. தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றவருக்கும் 104 மதிப்பெண் பெற்றவருக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் 42 வழங்கப்படும். ஆசிரியர் பட்டப் படிப்பில் 69.98 மதிப்பெண் பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் பன்னிரெண்டும், 70.00 பெற்றவருக்கு சிறப்பளிப்பு மதிப்பெண் 15ம், 99.98 மதிப்பெண் பெற்றவருக்கும் அதே 15 சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே போலத்தான் இளநிலை பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. இத்தகைய கேலிக்கூத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அறிவியல்பூர்வமாக இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. மீண்டும் பணி நிரப்பும் பணிகள் மந்தமைடைந்தது.

இவ்வாறு சிறப்பளிப்பு மதிப்பெண்களின் குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது என நினைக்க, மதுரை உச்ச நீதிமன்ற கிளை மீண்டும் ஒரு உத்தரவை வழங்கியிருக்கிறது. இந்தச் சிறப்பளிப்பு மதிப்பெண்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பையும், பணி அனுபவத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அவர்களது இணைய தளத்தில் எந்த தகவலும் முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான தகவல்களும் இல்லை. ஊடகங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தைச் சேர்ந்த முக்கியமான நபர் தெரிவித்தார், வட்டாரம் தெரிவித்தது என்றே தகவல்கள் வருகிறது. இதனாலேயே பல வதந்திகளும் உலா வருகிறது. சமீபத்திய வதந்தி (முறைப்படி தேர்வு வாரியம் அறிவிக்காத வரையில், அது வதந்திதான்.) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதைப் போல, UG-TRB தேர்வு நடத்தப்படும், அதில் பெறும் மதிப்பெண்களில் 50 சதவீதமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற சிறப்பளிப்பு மதிப்பெண்ணின் 50 சதவீதமும் சேர்த்து பெறப்படும் மதிப்பெண்ணிலிருந்தே பணிவழங்கப்படும்.

இப்படி ஒரு நடைமுறை கடைபிடிக்கப்படுமானால், அது எளிமையானதொரு தேர்வை மேலும் மேலும் சிக்கலாக்குவதற்குச் சமம் ஆகும். அதோடல்லாமல், முதுநிலை ஆசிரியர்களுக்கு பின்பற்றப்படும் தேர்வு முறையைப் போன்ற தேர்வே என்றால், ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? முதுநிலை ஆசிரியர்களுக்குப் பின்பற்றப்படுவது போன்ற அந்த ஒரு தேர்வே போதாதா? அல்லது முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு தேர்வு இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏன் சிக்கலான இரண்டு தேர்வு? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இதுவரை வெளிவந்த மூன்று அறிவிப்புகளிலுமே எத்தனை பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்பது அறிவிக்கப்படவே இல்லை. தேர்வு எழுதப் போகும் தேர்வர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அரசும், தேர்வு வாரியமும் நினைக்கிறதா? அல்லது அவர்களிடமே அந்தத் தகவல் முழுமையாக இல்லையா?

இதற்கிடையில் மாற்றுத் திறனாளிகளையும் இதே தகுதித் தேர்வை எழுத வேண்டும், என்ற குளறுபடிகள் தாண்டவமாட, அவர்களுக்குத் தனியாக சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதே போல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியர்களுக்கானத் தேர்வுகளும் குளறுபடியும் ஓராண்டாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய தேதியில் அதிகமான நீதிமன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு துறை கல்வித்துறையாகத் தான் இருக்கும். கல்வித்துறையில் இத்தகைய குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீதிமன்றப் படியேறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதால் இத்தனை வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது கல்வித்துறை. இத்தனை வழக்குகளை எங்களால் கையாளமுடியவில்லை, அத்தனை வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்கும் படி ஆசிரியர் தேர்வு வாரியம் கோரும் அவல நிலையும் ஏற்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் அண்டை மாநிலங்களில் பெருமளவு குழப்பம் இல்லாமல், நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, ஏன் தமிழகத்தில் மட்டும் இத்தனை குழப்பமான சூழ்நிலை நிலவ வேண்டும்? பதில் மிகவும் எளிமையானது. தேர்வுக்கான நெறிமுறைகள் தெளிவாக வகுக்கப்படாமையே ஒரே காரணம்.

இந்தியாவிலேயே முதன்முதலாக போட்டித்தேர்வுகளுக்கான வாரியத்தை அமைத்த மாநிலத்தில் இத்தகையதொரு நிலை என்பது உண்மையிலேயே வேதனைதான். ஆசிரியர் தேர்வு வாரியம், பாடத்திட்டத்தை வடிவமைக்கவும், வினாத்தாளை வடிவமைக்க எப்படி ஒரு குழு அமைத்துச் செயல்படுகிறதோ அதே போல, தேர்வு நடத்தும் முறைகளையும், பணி நியமன முறைகளையும், சிறப்பளிப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கான முறைகளையும், ஏனைய வழிகாட்டு நெறிமுறைகளையும் அமைக்க ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்து மீண்டும் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடியொட்டி தேர்வுகள் நடத்தப்பட்டிருந்தால் இத்தனைச் சிக்கல்கள் இல்லாமல் இருந்திருக்கும்.

தேர்ச்சி பெற்று பல மாதங்களாக பணி கிடைக்காமல் தேர்வர்களும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் அவதிப்பட வேண்டிய நிலையும் இருந்திருக்காது. ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க ஊதியம் இல்லாமல், ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களை சேவை செய்ய வருமாறு அழைக்க வேண்டிய கட்டாயமும் இருந்திருக்காது.

ஆசிரியர் தேர்வு வாரியமும், அரசும் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்காததின் விளைவு, தேர்வர்கள் நீதிமன்றங்கள் மூலமாக இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமைக்க உதவிக் கொண்டிருக்க்கிறார்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகை வழங்கியது, சிறப்பளிப்பு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்பட வேண்டும், சிறப்பளிப்பு மதிப்பெண் வழங்கும் முறை என்று எல்லாவற்றையும் நீதிமன்ற உத்தரவின் நூல்பிடித்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்குதளங்களில் பிரச்சினைகள் என்றால், அதனை முற்றாகத் தீர்க்க இற்றைப்படுத்தல்களைச் செய்யாமல், பேட்ச்கள் (Patch) எனப்படும் ஓட்டை உடைசல்களை அடைக்கும் வழிமுறைகளையே செய்வார்கள். அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியம் இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்காமல் நீதிமன்ற உத்தரவுகளையே பின்பற்றி வருகிறது.

கல்வியாளர்கள் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து, ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவை கட்டாயம் பின்பற்றும் படியும், தேர்வு முடிந்த குறிப்பிட்ட காலவரையறையில் பணி நிரப்புதல் செய்யப்பட வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை வாரியம் செயல்படுத்தும் படி செய்ய வேண்டியதுதான். அதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்களை நீதிமன்ற உதவியோடு கல்வியாளர்களாகிய நாமே செய்ய வேண்டியதுதான்.

Wednesday, June 25, 2014

TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகவும்,ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும்
வாய்ப்பளிப்பதாகவும் மற்றும் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியிடப்பட்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஆசிரியர் பட்டய படிப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் தயாரிப்பு

ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவன பட்டயப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வு துவங்க உள்ள நிலையில், 40 பக்கத்தில் விடைத்தாள் ஏடுகள் தைக்கும் பணி துவங்கி உள்ளது.

தமிழக அரசின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி பட்டயத்தேர்வு கடந்த 11ம் தேதி தேர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 14ம்தேதி வி.ஏ.ஓ. தேர்வு நடந்ததால் இத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.அதன்படி தொடக்கக் கல்வி பட்டய படிப்பின் இரண்டாம் ஆண்டுக்கு நாளை (26ம் தேதி) துவங்கி வரும் ஜூலை 3ம் தேதி வரை நடக்கிறது. முதலாம் ஆண்டுக்கு ஜூலை 7ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. தேர்வுக்கான பணிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது.கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் தேர்வு நடந்தது போல் அல்லாமல், புதியமுறையில் நடப்பாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் 40 பக்கம் கொண்ட விடைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்படும்.

விடைத்தாள் குளறுபடிகள் ஏற்படாமல் இருக்க, பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. பொதுத் தேர்வில் பின்பற்றப்பட்ட விடைத்தாள் பராமரிக்கும் முறை, ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கும் பின்பற்றப்படும்.இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் படித்த 2,053 மாணவ, மாணவியருக்கு விடைத்தாள் தைக்கும் பணி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி உள்ளது. முதல் பக்கம் டாப் சீட்டில், மாணவர் பற்றிய விபரங்கள், பார் கோடு வசதியுடன் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.புதிய முறையில் விடைத்தாள் தயாரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுவதால், எவ்வித குளறுபடி மற்றும் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sunday, June 22, 2014

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 4,477 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில் 933 பேர் (20 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான சுய விவரப் படிவம், அடையாளப் படிவம், அங்கீகாரப் படிவும் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதில் பங்கேற்பதற்காக அழைப்புக் கடிதங்கள் தனியாக அனுப்பப்படாது.
மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் சலுகை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, அவர்கள் இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேறு யாரையாவது நியமிக்கலாம். அதற்காக அங்கீகாரக் கடிதத்தை தேர்வர் அந்த நபருக்கு வழங்க வேண்டும்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடங்கள்....
மதுரை மண்டலம் - கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் - ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை
சேலம் மண்டலம் - நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம்
திருச்சி மண்டலம் - புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் - செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, திருச்சி
விழுப்புரம் மண்டலம் - விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

Friday, June 20, 2014

வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரம் டிஇடி தேர்வில் தேர்ச்சி பட்டதாரிகள் உண்ணாவிரதம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் நேற்று உண்ணா விரதம் இருந்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 150க்கு, 90க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றும், வெயிட்டேஜ் மதிப்பெண்ணால் பாதிக்கப்பட்டு, பணி நியமனம் கிடைக்காதவர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணா விரதம் குறித்து பட்டதாரிகள் கூறியதாவது:கடந்த 2013ல் நடந்த டிஇடி தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றோம். அரசாணை 181ன்படி டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால் ஆசிரியர் பணி என்று அறிவித்தார்கள். அதன்படி டிஇடி தேர்வில் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோம்.

எங்களுக்கு சான்று சரிபார்ப்பும், கடந்த ஜனவரி மாதம் நடந்தது. பின்னர் 55 சதவீதம் பெற்றால் போதும் என்ற அடிப்படையில் 5 சதவீதம் அரசு தளர்த்தியது. இதற்காக அரசாணை 71 வெளியிடப்பட்டது. இதனால் டிஇடி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பள்ளிப் படிப்பு, கல்லூரிப்படிப்பு முடித்தவர் பலர் இருக்கிறோம்.இந்நிலையில் அரசாணை 71ன்படி சலுகையின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அதனால், டிஇடி தேர்வு மற்றும் பி.எட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு எங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

Thursday, June 19, 2014

ஜூன் 26க்குள் 2 ஆயிரம் புதிய ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித்துறை பரிசீலனை

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. 

இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 'பணிநிரவல்' மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 26ல் நடக்கிறது. இதில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைந்ததால், தற்போதுள்ள மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக கணக்கிட்டு, 'பணிநிரவல்' அடிப்படையில் அவர்களை பணியிட மாறுதல் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பணி மாறுதல் செய்யப்பட்டால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என்ற தகவலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக, 'சர்பிளஸ்' ஆசிரியர் எண்ணிக்கையை கணக்கிட்டு, ஒவ்வொரு மாவட்டங்களிலும் கூடுதல்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய பணியிடங்களை, ஆங்கில வழி வகுப்புகளுக்கு பாடவாரியாக ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களை ஜூன் 26 ல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் நடக்கும் பணிநிரவல் 'கவுன்சிலிங்' முன் ஒதுக்கீடு செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்பிளஸ்' பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கையுடன், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளுக்கு ஒதுக்கீடு செய்ய பரிசீலனை நடக்கிறது. மாவட்டம் தோறும் ஒதுக்கப்பட்ட புதிய பணியிடங்கள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 26 சர்பிளஸ் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சேர்ந்து, கூடுதலாக 220 புதிய பணியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது," என்றார்.

Tuesday, June 17, 2014

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கட்டுப்பாட்டில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவில் ஆண்டிற்கு 32 மாணவிகள் படிக்கின்றனர்.
இங்கு படித்த 100 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றபோதும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவு, பி.எஸ்.சி. விலங்கியல் பாடத்திற்கு சமமானதற்கான அரசாணை இல்லை என்று கூறி, அவர்களுக்கு ஆசிரியர் பணி தர டி.ஆர்.பி. மறுத்துவிட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் புகார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "பி.எஸ்.சி. விலங்கியல் பாடப்பிரிவும், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவும் சமமான படிப்பு என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததால் படித்தோம். ஆனால், பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவை டி.ஆர்.பி. ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து கல்லூரி மற்றும் அன்னை தெரசா பல்கலையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை" என்றனர்.
கல்லூரி முதல்வர் பத்மலதா கூறுகையில், "அரசாணை வெளியிடுவது தொடர்பாக அரசுக்கும், பல்கலைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்" என்றார்.
குழப்பங்கள்!!!!
தெளிவு பெற போகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் சில தகவல்கள் நம்மை மீண்டும் குழப்புகிறது.

குழப்பம் 1
இந்த வாரத்தின் இறுதிக்குள் தரவரிசைப் பட்டியல் அல்லது தேர்வு பட்டியல் வெளியாகவிருக்கிறது.இது கிட்டதட்ட உறுதிபடுத்தப் பட்ட செய்திதான்.
இது வரவேற்க வேண்டிய செய்திதானே என்று நினைக்கலாம்.

ஆனால் பள்ளிக்கல்வி துறையிடமிருந்து TRB க்கு இதுவரை காலி பணியிடம் குறித்த தகவல் சென்று சேரவில்லை.அதோடு பள்ளிகல்வித் துறைக்கான surplus இந்த மாத இறுதிவரை நடைபெறுகிறது.surplus முடிந்த பின்புதான் காலி பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல் தெரிய வரும்.எனவே வெளியாகும் பட்டியல் தரவரிசை பட்டியலாக இருந்தால் நிம்மதி பிறக்கும்.

குழப்பம் 2
இந்த ஜூன் மாதத்தோடு தொகுப்பூதிய ஆசியர்களுடனான ஒப்பந்தம் முடிவடைகிறது.ஆனால் அடுத்த 3 மாதங்களும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக தெரிகிறது.இறுதிப் பட்டியல் வெளியாகும் வேளையில் அவர்களை அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிக்க செய்வதின் மர்மம் என்னவோ?

குழப்பம் 3
PG, BT ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாகத்தான் நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன.ஆரம்பம் முதலே SG ஆசிரியர் நியமனம் குறித்து சர்ச்சை எதுவும் இல்லை.ஆனால் "இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது" என தினமணி எழுதியிருப்பது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை.

புது குழப்பம்
"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.-இது செய்தி

கடைசிவரை ஓய்வு பெற்றவர்களை கொண்டே பள்ளியை நிர்வாகம் செய்து கொள்ளலாமே பிறகு எதற்கு TET தேர்வை நடத்தீனீர்கள்? என்பது என் கேள்வி.

சிறு விளக்கம்
வரும் 20 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக ஒரு குழு அறிவித்துள்ளது.அப்போராட்டம் குறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் TET மதிப்பெண்ணிற்கு 60% லிருந்து 85% மாக உயர்த்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் காவல் துறை ஆணையரிடம் அனுமதி பெறவே அந்த காரணம் கூறப்பட்டது.போராட்டம் அன்று கோரிக்கையின் அம்சம் மாறலாம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உண்மையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டாலும் 82-89 பெற்றவர்கள் முழுமையாக பாதிப்படைய மாட்டார்கள்.89 பெற்றவருக்கும் 90 பெற்றவருக்கும் பெரிய வேறுபாடு இருக்காது.இங்கு 82-89 பெற்றவர்கள் முழுமையாக ஒதுக்கப் படவில்லை.

போராட்டம் முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கப் பட்ட பின்புதான் நடைபெற உள்ளது.அதனால் கைது, தடியடி,FIR போன்ற எந்த அசம்பாவிதமும் நடைபெறாது எனவும் போராட்ட குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

Monday, June 16, 2014

ஆசிரியர் பணி நிரவல்: டி.இ.டி.,ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணிநிரவல் மூலம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால் டி.இ.டி.ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். 2011 செப்.1ல் பள்ளிக்கு வந்த மாணவர்களின் எண்ணிக்கை படி, ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்கள் தற்போது இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். அவர்களை பொது மாறுதல் கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்யவேண்டுமென தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 2,900 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான பணியிடங்கள், பணிநிரவல் மூலம் உபரி ஆசிரியர்களால் நியமிக்கப்பட உள்ளது. இதனால், 2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறையினர் கூறுகையில், "ஆசிரியர் பணியிடங்கள் குறையாமல் இருக்க ஆங்கில வழி கல்வியை துவங்கி, மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்து வருகிறோம்" என்றார்.
15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் எப்போது?

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேருக்கான தேர்வுப் பட்டியல் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மொத்தம் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதனடிப்படையில் 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப்பட்டியல் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் தயாரிப்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை குறித்து இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

Thursday, June 12, 2014

டி.இ.ஓ. தேர்வு: கீ ஆன்சர் வெளியீடு- டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம்

தமிழக அரசின் பள்ளிக் கல்விப் பணியில் 11 மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 8-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வினை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிஎட் பட்டதாரிகள் எழுதினர்.

இந்நிலையில், டிஇஓ தேர்வுக் கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த விடைகள் தொடர்பாக ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பும் தேர்வர்கள் ஜூன் 18-ம் தேதிக்குள் ஆவணங்களுடன் தெரிவிக்கலாம் என்றும், இந்த காலக்கெடுவுக்கு பின்னர் வரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Monday, June 9, 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கு தனித்தேர்வர்கள் ஜூன் 9, 10 தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ தேர்வுகள் ஜூன் 26 முதல் ஜூலை 14 வரை நடைபெறுகின்றன. முதலாமாண்டு, இரண்டாமாண்டு தேர்வுகளுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் இப்போது தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த பிறகு, அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலேயே நேரடியாகச் செலுத்த வேண்டும்.
தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் தேர்ச்சி 7 ஆண்டுகளுக்கு செல்லும். இதற்கு அடையாளமாக அவர்களின் பதிவு எண், மதிப்பெண், தேர்ச்சி பெற்ற ஆண்டு உள்ளிட்ட விவரம் அடங்கிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.

74 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்களை தயாரித்து வழங்கும் பணியை எளிமைப்படுத்த ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அணுகுமுறையை கையாள முடிவு செய்துள்ளது. இதன்படி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நெட் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களை ஆன்லைனில் மட்டுமே வழங்குவது போல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது.

தேர்வு வாரிய குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வரும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தனது பதிவு எண், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மாதம், ஆண்டு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இணையதளத்தில் இருந்து சான்றிதழை நேரிடையாக பதிவிறக்கம் செய்யலாம்.
மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு முதல்நிலை எழுத்து தேர்வு 9 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள்

மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 9 ஆயிரம் பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதத்திற்கு மேல் எழுத வரவில்லை.

முதல்நிலை தேர்வு 

பள்ளி கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பெறப்பட்டன. மொத்தம் 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். முதல்நிலை தேர்வு நேற்று சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வரவில்லை. 9 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் எழும்பூரில் உள்ள மாநில மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடந்தது. அங்கு 400 பேரில் 222 பேர் வரவில்லை. 178 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

தேர்வு எழுதியவர்களில் ஆண்களும், பெண்களும் உண்டு. பெண்களில் பலர் திருமணமாகி குழந்தை பெற்றவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு தேர்வு எழுதினார்கள்.

கருத்து

தேர்வு முடிந்து வெளியே வந்த தீபன் குமார் என்ற பட்டதாரி கூறுகையில், ‘நான் இயற்பியல் பாடத்தை விருப்பமாக எடுத்து படித்தவன். இந்த தேர்வில் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட்டிருந்தது. இயற்பியல், வேதியியல் கேள்விகள் எளிதாக இருந்தன. கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கஷ்டமாக இருந்தன. மொத்தத்தில் இந்த தேர்வு எளிதாக இருந்தது என்று கூற இயலாது’ என்றார்.

வடபழனியைச் சேர்ந்த செலீனா என்ற பெண் கூறுகையில், வேதியியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்டவவை எளிதாக இருந்தன என்றும், கணிதத்தில் இருந்து கேட்கப்பட்டவை சற்று சவாலாக இருந்தன என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர்கள்

தேர்வு எழுதியவர்களில் பலர், அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வும் நடத்தப்படும். பின்னர் இறுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

மாவட்ட கல்வி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் முதன்மை கல்வி அதிகாரியாகி, பள்ளி கல்வித்துறையில் இணை இயக்குனர் ஆகி, பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதவி வரை வரலாம். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

Friday, June 6, 2014

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் பாட வாரியாக காலிப்பணியிடங்கள் விவரம் சேகரிப்பு

ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது. பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கேட்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

காலிப்பணியிடங்கள் 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது.

இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார். அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால் தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது.

மதிப்பெண் வெயிட்டேஜ்

அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மார்க் ஆகியவற்றின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் இடை நிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது.

ஆசிரியர்களை தேர்வு செய்ய எப்படி மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்குவது என்று புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய மேற்கொண்ட அதே முறையுடன் கூடுதலாக பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்தநிலையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் காலிப்பணியிடங்கள் புதிதாக எவ்வளவு அதிகரித்து உள்ளன என்பதை பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

மேலும் பாட வாரியாக அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு முதலிய பாடங்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளன என்று கணக்கிட்டு வருகிறார்கள்.

சட்டசபை கூட்டம்

ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை காலியாக கிடக்கின்றன. எப்போது நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கும். ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள்.

பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்க கல்வி இயக்குனரகம் ஆகியவற்றில் ஒப்படைக்கும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு

அடுத்த கட்டமாக கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்ய நேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனத்திற்கான ஏற்பாட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.
அதிகரிக்கும் காலி பணியிடங்கள் - கூடுதல் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு!

ஆசிரியர் தேர்வுக்கு, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது. இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது: துறை வாரியாக, ஆசிரியர் காலி பணியிடங்களை ஏற்கனவே பெற்றுள்ளோம்.
பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வருகின்றன.

எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால்தான் பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர் எண்ணிக்கை தெரியவரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். மேற்கண்ட துறைகளில் இருந்துதான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.

Wednesday, June 4, 2014

73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண் உயர் நீதிமன்ற உத்தரவால் அதிரடி மாற்றம்

உயர் நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய கட் ஆப் மார்க் வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8- வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை தமிழகம் முழுவதும் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மார்க்) ஆகும். அதன்படி, தகுதித்தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் எடுத்து 27 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றனர். வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சுமார் 24 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவுசெய்திருந்தது.தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ்2 மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண், பி.எட்.மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு,பிளஸ்-2, ஆசிரியர் பட்டயப்படிப்பு மதிப்பெண்)அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட மதிப்பெண்சதவீதம் முதல் குறிப்பிட்ட சதவீதம் வரை குறிப்பிட்ட மார்க்நிர்ணயிக்கப்பட்டு அதன்படி கட் ஆப் மதிப்பெண் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு அதன்அடிப்படையிலேயே 27 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது. மதிப்பெண் சலுகை இதற்கிடையே, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேர்ச்சி 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக (150-க்கு 82 மார்க்) குறைத்து கடந்த பிப்ரவரி 6-ம்தேதி அரசு உத்தரவு பிறப்பித்தது. 5 சதவீத மதிப்பெண் சலுகையால் கூடுதலாக 46 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியது. இதற்கிடையே, கூடுதலாக தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21 ஆயிரம் பேருக்கு கடந்த 2மாதங்களுக்கு முன்பு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான (சுமார் 25 ஆயிரம் பேர்) சான்றிதழ் சரிபார்ப்பு மே 6முதல் 12-ம்தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.புதிய கட் ஆப் மார்க் இந்நிலையில், தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண்,பி.எட். மதிப்பெண்,தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக்கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல்
99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால்,நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப கட் ஆப் இதே முறைதான் பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட்.இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள்.உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாகசரிபார்ப்பு நடத்தப்படுமா,ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்க ளின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.
15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு பட்டியல் இருபது நாளில் வெளியிட திட்டம்

ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில், தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு தெரிவித்தது.

ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது. இதையடுத்து, 15 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமன பணியை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி., முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்றிரவு கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர் என, 72 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு, நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. கல்வி தகுதிக்கான, 40 மதிப்பெண் மட்டும் அளிக்காமல், சான்றிதழ் சரிபார்ப்பை முடித்துவிட்டோம். தற்போது, புதிய அரசாணையின்படி, கல்வி தகுதிகளுக்கும், டி.இ.டி., தேர்வுக்கும், மதிப்பெண் அளிக்க வேண்டும். சதவீத அடிப்படையில் கணக்கிட்டு, மதிப்பெண் அளிக்க வேண்டி உள்ளது. இந்தப் பணியை, இரு வாரங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். அதிகபட்சமாக, 20 நாட்களுக்குள், 72 ஆயிரம் பேரின், 'ரேங்க்' பட்டியலை வெளியிட்டு விடுவோம். அப்போது, 15 ஆயிரம் புதிய ஆசிரியரின் தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.
ஆசிரியர் தேர்வில் புதிய 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம்: அரசாணை வெளியிடப்பட்டது

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு, புதிய, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.

கடந்த 2012ல், ஆசிரியர் தேவையை விட, தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை, வெறும், 2,400 பேர் என்பதால், எந்த பிரச்னையும் இன்றி, அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், அதே ஆண்டின், இறுதியில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. பின், 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் தகுதி அள வை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே, தேர்ச்சி பெற்றோரில் இருந்து, 15 ஆயிரம் பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை, பழைய, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.

பழைய மதிப்பெண் முறை:

டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40க்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிட்டு, ஆசிரியரை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. இடைநிலை ஆசிரியராக இருந்தால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண் (அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண்), டிப்ளமோ படிப்பிற்கு, 25 மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 மதிப்பெண் என, 100க்கு, தேர்வர் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு:

இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை, மதிப்பெண் எடுத்தால், 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்); 80 முதல் 90 வரை எடுத்தால், 12; 70 - 80 வரை, 9; 60 - 70 வரை, 6; 50 - 60 சதவீதம் வரை, 3 மதிப்பெண் என, இருந்தது. இதேபோல், பட்டதாரி ஆசிரியருக்கும், 40 மதிப்பெண், 'வெயிட்டேஜ்' முறையில் அறிவிக்கப்பட்டது. இந்த முறையை எதிர்த்தும், தேர்வர்கள் பெற்ற ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் வகையில், புதிய, 'வெயிட்டேஜ்' முறையை அமல்படுத்த வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், பலர் வழக்கு தொடர்ந்தனர்.

பழைய முறை ரத்து:

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல், 29ம் தேதி, புதிய உத்தரவை பிறப்பித்தது. பழைய, 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் வகையில், புதிய முறையை, அமல்படுத்த உத்தரவிட்டது. மேலும், உயர் நீதிமன்றம், ஒரு புதிய முறையை, தமிழக அரசுக்கு, யோசனையாகவே தெரிவித்தது. அதைப்போலவோ அல்லது வேறு அறிவியல் பூர்வமான முறையையோ, அறிமுகப்படுத்தலாம் என்றும், அரசுக்கு தெரிவித்தது.

புதிய அரசாணை:

தற்போது, உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனையை ஏற்று, அதன்படி, புதிய, 'வெயிட்டேஜ்' முறையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், சபிதா வெளியிட்டு உள்ளார்.

அரசாணை முழு விவரம்:

இடைநிலை ஆசிரியர்

* பிளஸ் 2 தேர்வுக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண், 'வெயிட்டேஜ்' முறையில் வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கு, 25 மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60க்கும், கணக்கில் கொள்ளப்படும்.

* பிளஸ் 2 தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண், சதவீதமாக கணக்கிட வேண்டும். சதவீதத்தை, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணுடன் பெருக்கி, பின், நூறால் வகுக்க வேண்டும்.

* இதேபோல், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவில் பெ றும் மதிப்பெண், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு வரும், மதிப்பெண் ஆகியவற்றை கூட்டி, ஒட்டுமொத்த மதிப்பெண் வழங்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர்

* பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், இதே முறை அமல்படுத்தப்படும். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண், பட்டப் படிப்பிற்கு, 15 மதிப்பெண், பி.எட்., படிப்பிற்கு, 15 மதிப்பெண் என, மொத்தம், 40 மதிப்பெண் கணக்கிடப்படும். டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படும்.

* அனைத்து மதிப்பெண்ணும், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

* பல தேர்வர்கள், ஒரே மதிப் பெண் பெற்றால், அவர்கள் பிறந்த தேதியின் அடிப்படையில், வயதில் மூத்தவர்களுக்கு, தேர்வில், முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய 'வெயிட்டேஜ்' முறையை கணக்கிடுவது எப்படி?

ஒரு தேர்வர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,121 மதிப்பெண் பெற்றால், அவரது சதவீதம், 93.41. இதை, 15ல் பெருக்கி, பின், நூறால் வகுத்தால் வரும் மதிப்பெண், 14.01. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணுக்கு, 14.01 மதிப்பெண்ணை, தேர்வர் பெறுகிறார். இதே தேர்வர், டி.இ.டி., தேர்வில், 150க்கு, 82 மதிப்பெண் பெறுகிறார் என்றால், இவரது மதிப்பெண் சதவீதம், 54.66. 54.66ஐ, அறுவதால் பெருக்கி, நூறால் வகுத்தால் வருவது, 32.80. பின், 14.01 உடன், 32.80ஐ கூட்டினால், ஒட்டுமொத்த மதிப்பெண் 46.81. மொத்தத்தில், 100க்கு, 46.81 மதிப்பெண் பெற்றார் என, கணக்கிடப்படும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், இதே முறையில் கணக்கிடப்படும்.

யாருக்கும் பாதிப்பு வராது:

இதுகுறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: தற்போது அறிவித்துள்ள, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், யாருக்கும் பாதிப்பு வராது. தேர்வரின், ஒவ்வொரு மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' முறையின் கீழ் வந்துவிடுகிறது. இந்த முறையில், 'ரேங்க்' பட்டியலை தயாரித்து, விரைவில், புதிய ஆசிரியரை நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி : புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் அரசு ஆணை வெளியீடு

டிஇடி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் போடுவது தொடர்பாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுவோர் தகுதி தேர்வு (டிஇடி தேர்வு) எழுத வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2011ல் தமிழகத்தில் டிஇடி தேர்வு நடத்தி அதில் 150க்கு 90 மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
டிஇடி தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் என்பதை எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு தளர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. அதையேற்று கடந்த பிப்ரவரி மாதம் 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு வழங்கி அரசு உத்தரவிட்டது. அதன்படிதேர்ச்சி பெற்றோருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு நடத்தியது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பில் பிளஸ் 2, டிடிஎட், டிஇஎட், பட்டப் படிப்பு, பி.எட், டிஇடி ஆகிய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு தனித்தனியாக அறிவியல் பூர்வமாக வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்ட வெயிட்டேஜ் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க மொத்தம் 100 மதிப்பெண் கணக்கிடப்படும். அதில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15, டிடிஎட், டிஇஎட் தேர்வு மதிப்பெண்ணுக்கு 25, டிஇடி தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். அதில் பிளஸ் 2 தேர்வுக்கு 10, பட்டப் படிப்புக்கு 15, பிஎட் தேர்வுக்கு 15, டிஇடி தேர்வுக்கு 60 என மதிப்பெண்கள் வழங்கப்படும். மேற்கண்ட மதிப்பெண்கள் வழங்கும்போது ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே மதிப்பெண்களை பெறும்பட்சத்தில் அவர்களில் பிறந்த தேதி அடிப்படையில் மூத்தோருக்கு சீனியாரிட்டி வழங்கப்படும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய வெயிட்டேஜுக்கான அரசாணை வெளியீடு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அரசாணையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அதிகபட்சம் 60 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் அளிக்கப்படும் எனவும், 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களுக்கு அதிகபட்சம் 15 மதிப்பெணகள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், D.T.Ed., D.E.Ed. தேர்வுக்கான மதிப்பெண்களுக்கு அதிகபட்சமாக 25 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது
வெளியானது G.O இனியும் வதந்தி வேண்டாம்.new G.O MS NO 71 DATE 30.05.2014

TET குறித்த நம்முடைய பல எதிர்பார்ப்பிற்கு குறிப்பாக நீதிமன்றத் 
தீர்ப்புக்கு பிறகு உண்டான குழப்பங்களுக்கு முதல் விடை கிடைத்துள்ளது.

TET தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அதாவது தனக்கு சாதகமான weightage முறைதான் வரப்போகிறது என்று comment செய்தார்கள்.

குறிப்பாக
+12 மதிப்பெண் நீக்கப்பட்டுள்ளது.TET மதிப்பெண்ணிற்கு 80% மும்
பட்டம்,B.ED மதிப்பெண்ணிற்கு தலா 10% வழங்கப் பட்டுள்ளாதாக தகவல்
வெளியானது.

இன்னும் சிலரோ seniority க்கு 5%
மதிப்பெண்ணும் experience க்கு 5% மதிப்பெண்ணும் வேண்டுமென்றும் இதையே அதிக
candidates விரும்புவதாகவும் எழுதினார்கள்.ஏன் கருத்து கணிப்பு கூட
நடத்தினார்கள்.அதன் முடிவு கூட இப்படிதான் இருக்க வேண்டும் என்று
எழுதினார்கள்.

இன்னும் சிலரோ முழுக்க முழுக்க TET
மதிப்பெண்ணை மட்டுமே கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.அந்த முறைதான்
யாருக்கும் பாதிப்பு வராது என்று நினைத்தார்கள்.

வேறு பலருக்கு பழைய weightage முறையே சிறந்தது என்ற எண்ணம் ஏக்கமாய் மாறியது.

ஆனால் நாம் எதிர்பார்த்த படியே நீதிமன்றம் பரிந்துரைத்த அதே weightage முறையே TRB ஏற்றுக் கொண்டு GO தயாரித்துள்ளது.

நேற்றிரவு வெளியிட்ட பதிவில் இது தவறான செய்தி,வதந்தி என்றே பல பின்னூட்டங்கள் வந்தன.

ஆனால் இப்போது இது 100% உறுதிப் படுத்தப்பட்டசெய்தியாகிவிட்டது.

எனவே இந்த G.O முறை உறுதிதான்.நீங்களும்இதை உறுதியாக நம்பலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தமிழக அரசு உத்தரவு

http://cms.tn.gov.in/sites/default/files/gos/sedu_e_71_2014.pdf
ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 வெளியிடப்பட்டுள்ளது 

புதிய முறைப்படி weightage மதிப்பெண் கணக்கிடும்போது பலர் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பின் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News in detail :ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானைGO MS. 71. நாள் 30.05.14 வெளியீடு

ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 வெளியிடப்பட்டுள்ளது

TNTET 2013 வெயிட்டேஜ் மதிப்பீடு செய்வது குறித்து நீதியரசர் நாகமுத்துவின் பரிந்துரை

Illustration (1) :- [For Graduate Assistant]
86.1. Let us assume that a candidate has secured 1020 marks in Higher Secondary Examination out of 1200. It is equivalent to 85%. Similarly, he has secured 80% in Degree Examination; 75% in B.Ed., Examination; and 70% in TET Examination. As per the computation of marks for Graduate Assistant in terms of the Government Order, 10 marks is awarded to Higher Secondary Examination, 15 is awarded to Degree Examination, 15 is awarded to B.Ed., Examination and 60 is awarded to TET Examination. This would go to show that more weightage mark is given to TET. This ratio namely 10:15:15:60 for Higher Secondary, Degree, B.Ed., and TET respectively should be adhered to while awarding weightage marks. This proportion can be maintained in the following manner, i.e., the percentage of marks secured can be further reduced to the above proportion. For example, in the illustration above,
(a) for 85% of marks secured in Higher Secondary Examination, weightage marks shall be as follows:-
85 X 10 w 100 = 8.50
(b) For 80% of marks secured in Degree Examination, the weightage marks shall be as follows:
80 X 15 w 100 = 12.00
(c) For 75% of marks secured in B.Ed., Examination the weightage marks shall be as follows:
75 X 15 w 100 = 11.25
(d) For 70% of marks secured in TET Examination, the weightage marks shall be as follows:
70 X 60 w 100 = 42.00
Total weightage marks = 73.75
86.2 In this method, for every one percentage of mark in Higher Secondary, the weightage mark is 0.10, for every one percentage of mark in Degree, the weightage mark is 0.15, for every one percentage of mark in B.Ed., the weightage mark is 0.15 and for every one percentage of mark in TET, the weightage mark is 0.60.

Illustration (2) :- [For Secondary Grade Teachers]
87.1. Let us assume that a candidate has secured the following marks:-
Higher Secondary Exam :85%
D.T.Ed.,/D.E.Ed., Exam:80%
TET: 75%
87.2. As per G.O.Ms.No.252, the weightage marks to be awarded are as follows:-
Higher Secondary Exam:15
D.T.Ed.,/D.E.Ed., Exam:25
TET: 60
Total 100
Thus, the ratio is 15:25:60
87.3. Applying the said ratio, for 85% of marks in Higher Secondary Examination, the weightage mark shall be

85 X 15 w 100 = 12.75

For 80% of marks in D.T.Ed., / D.E.Ed., Examination the weightage mark shall be
80 X 25 w 100 = 20.00
For 70% of marks in TET Examination, the weightage mark shall be
70 X 60 w 100 = 42.00
Thus the total weightage mark is 74.75

87.4. In this method, for every one percentage of mark in Higher Secondary, the weightage mark is 0.15, for every one percentage of mark in D.T.Ed.,/D.E.Ed., the weightage mark is 0.25 and for every percentage of mark in TET, the weightage mark is 0.60.

87.5. If this method is adopted, in my considered opinion, there will be no anomaly or inconsistency or discrimination. In my opinion, this method clearly distributes the appropriate weightage marks as per the ratio. This method is scientific, flawless and reasonable. This is only a suggestion from this court and it is for the Government of Tamil Nadu to consider the same as to whether this method can be followed or any other better method can be followed. At any rate, it is made clear that the present grading system is highly arbitrary and discriminatory and, therefore, the same cannot be the basis for selection

ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை முழுமையாக பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 ஐ தமிழக அரசின் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்

Tuesday, June 3, 2014

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் புதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, புதிய நியமன முறை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 
அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இதே போல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் சிறப்பு ஆசிரியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். இவர்கள் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடங்கள் எடுப்பார்கள்.
சிறப்பு ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் சான்றிதழ் அல்லது உயர்நிலை தேர்ச்சியுடன் டி.டி.சி. எனப்படும் தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் முடித்திருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் தடை முன்பு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்த சிறப்பு ஆசிரியர்கள், பின்னர் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப் படையில் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பதவியில் 724 காலியிடங்களை நிரப்பும் வண்ணம் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையிடமிருந்து மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு பெற்றது. ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 3,700 பேர் சிறப்பு ஆசிரியர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தயாரிப்புப் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டிருந்த நிலையில், வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இதில் சிறப்பு ஆசிரியர் நியமனமும் அடங்கும். இதுவரை சிறப்பு ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் மட்டுமே பதிவுமூப்பு அடிப்படையில் நிரப் பப்பட்டு வந்தன. தற்போது இடைநிலை ஆசிரி யர்களை, தகுதித்தேர்வு மதிப் பெண், பிளஸ்-2 மார்க், ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் என வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது. இந்த நிலையில், தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரி யர்கள் நியமனத்தில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நியமனம் இருக்குமா, அல்லது சிறப்பு தேர்வு ஏதும் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை. விரைவில் புதிய நியமன முறை புதிய நியமன முறை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித் துறைக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பியது. ஆனால், புதிய நியமன முறை குறித்து அரசு தீவிரமாக ஆய்வுசெய்து வருகிறது. எனவே, விரைவில் புதிய நியமன முறையை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.