Saturday, May 31, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை போன்று ஜெயராணி பெண்கள் மேல்நிலை பள்ளி சேலம், பிஷப் ஹெர்பர் மேல்நிலை பள்ளி புதூர்& திருச்சி, காமராஜ் முனிசிபல் ஆண்கள் மேல்நிலை பள்ளி விழுப்புரம் ஆகிய இடங்களிலும் அந்தந்த பகுதி மாவட்டங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதற்காக தனியே அழைப்பு கடிதங்கள் அனுப்பி வைக்கப்படமாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, May 30, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 10.6.2014 முதல் 13.62014 வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளுவதற்கான கடைசி வாய்ப்பு

http://trb.tn.nic.in/TET2013/29052014/msg.htm
TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங்நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்டஉபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம்நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

Saturday, May 24, 2014

இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் -இயக்குனர் செயல்முறைகள் ------

https://drive.google.com/folderview?id=0B_l-ovzH9MOgeGpOY0R2LXYzS2M&usp=sharing
டி.இ.டி., சான்றிதழ் வாங்கலையா?

டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் வாங்காத தேர்வர்கள், தங்களது விவரங்களை, ஜூன், 7ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
அறிவிப்பு விவரம்:கடந்த, 2012, ஜூலை 12ம் தேதி, மற்றும் அதே ஆண்டில், அக்டோபர், 14ம் தேதி நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்
வழங்கப்பட்டுவிட்டது.எனினும், டி.இ.டி., தகுதி சாறிதழ் கிடைக்காதவர் யாராவது இருந்தால், அவர்கள், தங்களது விவரங்களை, வரும், ஜூன் 7ம் தேதிக்குள், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை சந்தித்து, தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி
சான்று கிடைக்காதவர்கள் ஜூன் 7க்குள் பதிவு செய்ய வேண்டும்ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி
சான்று கிடைக்காதவர்கள் ஜூன் 7க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தகுதி சான்று கிடைக்காதவர்கள் ஜூன் 7க்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்றால் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு 2009ல் சட்டம் இயற்றியது. இது தமிழகத்தில் 2011-2012ல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. 2012 ஜூலை 12 மற்றும் அக்டோபர் 14ம் தேதி இரு கட்டமாக நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய தகுதி சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மூலம் வழங்கிவிட்டது.

மேற்கண்ட தகுதிச் சான்று கிடைக்கப் பெறாதவர்கள் யாராவது இருந்தால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகி தாங்கள் தேர்வு எழுதிய விவரங்களை ஜூன் 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவலை ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை (சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு விட்டன.

எனினும், ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அணுகி தங்களுடைய விவரத்தை ஜூன் 7-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 21, 2014

சிறப்பு டி.இ.டி., தேர்வில் 4,476 பேர் பங்கேற்பு

தமிழகத்தில், நேற்று நடந்த, மாற்றுத் திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 4,476 பேர், பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கென, தனியாக, சிறப்பு டி.இ.டி., தேர்வை (இரண்டாம் தாள்) நடத்த, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, இத்தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும், 39 மையங்களில் நடந்தது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்காக, கூடுதலாக, ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இதில், பார்வையற்றவர்கள், 1,175 பேரும், இதர குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள், 3,301 பேரும் பங்கேற்றனர். தேர்வெழுத பதிவு செய்தவர்களில், 218 பேர், "ஆப்சென்ட்.' தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். சமூக அறிவியல் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட, 94வது கேள்வி மட்டும், பாடத்திற்கு சம்பந்தம் இல்லாததாக இருந்தது என, சிலர் தெரிவித்தனர். நான்கு வகை குறியீடுகளை கொடுத்து, அதை, நான்கு விடைகளுடன் பொருத்துமாறு, கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்வி, பாடத்தில் வரவில்லை என, பார்வையற்ற தேர்வர்கள் தெரிவித்தனர். விடைத்தாள் திருத்துவதற்கு முன், இந்த விவகாரம் குறித்து, ஆய்வு செய்யப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

Tuesday, May 20, 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இத்தேர்வு, நாளை (மே 21) காலை, 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறுகிறது. கல்வி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற, 1,215 பேர்; உடல் ஊனமுற்ற 3,477 பேர் என, மொத்தம், 4,692 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வி துறை இணை இயக்குனர் தகுதியிலான, அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,' என்றார்
நாளை நடக்கிறது சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: 4,692 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு, நாளை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும், 4,692 பேர் பங்கேற்கின்றனர்.
ஆசிரியர் தேர்வுவாரியம்(டிஇடி) மூலமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு, அக்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதற்கான சிறப்பு பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இத்தேர்வு, நாளை(மே 21) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகம் முழுவதும், 32 மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்பார்வையற்ற 1,215 பேர், உடல் ஊனமுற்ற 3,477 பேர் என ,4,692 மாற்றுத்திறனாளிகள் எழுதுகின்றனர். இதை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், கல்வித்துறை இணை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
சான்றிதழ் மாயமான வழக்கு: அஞ்சல் துறைக்கு தீர்ப்பாயம் உத்தரவு
சான்றிதழ்கள் மாயமான வழக்கில், அஞ்சல் துறை இழப்பீடு வழங்க, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் மாற்றம் செய்து உத்தரவிட்டது.
வேலூர், தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றுபவர் லட்சுமிபிரபா. 2004ல் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கு, தன் கல்விச் சான்றுகள் மற்றும் 6,500 ரூபாய் கட்டணத்திற்கான டி.டி., ஆகியவற்றை அனுப்பினார். ஆனால், அவை, பல்கலைக்கு சென்று சேரவில்லை. இதையடுத்து, அஞ்சல் துறை இழப்பீடு வழங்கக் கோரி, வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், லட்சுமி பிரபா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், மனுதாரருக்கு இழப்பீடாக, 15 ஆயிரம் ரூபாய் உட்பட, 21 ஆயிரம் ரூபாயை, அஞ்சல் துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அஞ்சல் துறை சார்பில், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. மாநில நுகர்வோர் தீர்ப்பாய தலைவர், நீதிபதி ரகுபதி, உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, இழப்பீட்டை 15 ஆயிரத்தில் இருந்து, 8,000 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட, இதர இழப்பீடுகளை அஞ்சல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் காலி பணியிட விவரம் சேகரிப்பு
அனை த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் இன்று காலை 9.30 மணிக்கு நடக்கிறது.தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட நடவடிக்கைகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் விவரம், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க உள்ள பள்ளிகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கியமாக இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்களுடன் ஆஜராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த காலி பணியிட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப் படுவர் என தெரிகிறது.

Thursday, May 15, 2014

ஆசிரியர் தகுதி தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பில் 1000 பேர் பங்கேற்கவில்லை

ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411 பேரும், இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 598 பேரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தாலும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துள்ளது. இதையடுத்து, புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் என தெரிகிறது.

Tuesday, May 13, 2014

பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நீட்டிப்பு இதுவரை பங்கேற்காதவர்கள் இன்று கலந்து கொள்ளலாம்

திருச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்து கொள்ளும் வகையில் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார் தெரிவித்தார்.

சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டதில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 6-ந் தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இந்த பணி நேற்றுடன் முடிந்தது.

கடந்த ஒரு வாரமாக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் மொத்தம் ஆயிரத்து 93 பட்டதாரி ஆசிரியர்களில் ஆயிரத்து 52 பேர் பங்கேற்றனர். 41 பேர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று வரை நீட்டிப்பு

இது குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வகுமார் கூறுகையில், ‘‘ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்றுடன் முடிந்தது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்காத பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் வகையில் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே கடந்த ஒருவாரமாக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் பங்கேற்க முடியாத தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் இன்று கலந்து கொள்ளலாம்’’ என்றார்.

Thursday, May 8, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவக்கம் 12ம்தேதி வரை நடக்கிறது

திருச்சி வாசவி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது. 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வில் அரசு அறிவித்துள்ள தளர்வு மதிப்பெண் பெற்று தாள் 2ல் தேர்ச்சி பெற்றுள்ள 1,200 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சி வாசவி வித்யாலாயா பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று 225 பேர் கலந்து கொண்டனர், அவர்களின் சான்றிதழ்களை அலுவலர்கள் சரிபார்த்தனர். வரும் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது. அவரவருக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 9.30 மணிக்கு வாசவி வித்யாலயா பள்ளி வளாகத்திற்கு வர வேண்டும். அழைப்பு கடிதம் பெற இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவக்கம் 12ம்தேதி வரை நடக்கிறது

திருச்சி வாசவி வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நேற்று துவங்கியது. 
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இத்தேர்வில் அரசு அறிவித்துள்ள தளர்வு மதிப்பெண் பெற்று தாள் 2ல் தேர்ச்சி பெற்றுள்ள 1,200 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சி வாசவி வித்யாலாயா பள்ளி வளாகத்தில் நேற்று துவங்கியது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று 225 பேர் கலந்து கொண்டனர், அவர்களின் சான்றிதழ்களை அலுவலர்கள் சரிபார்த்தனர். வரும் 12ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது. அவரவருக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 9.30 மணிக்கு வாசவி வித்யாலயா பள்ளி வளாகத்திற்கு வர வேண்டும். அழைப்பு கடிதம் பெற இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Wednesday, May 7, 2014

TNTET: சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் -Jaya News

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்த 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி, மாநிலம் முழுவதும் 29 மையங்களில் இன்று தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, இடஒதுக்கீடு பிரிவினர், 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சியடைந்தவர்களாவர்.

இதன் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீதமதிப்பெண் சலுகைபடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகையின்படி தேர்ச்சி பெற்ற சுமார் 25 ஆயிரம்பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி, வரும் 12-ம் தேதிவரை நடைபெறுகிறது. சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சை உள்ளிட்ட 29 மையங்களில் நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், அந்தந்த மாவட்டத்திற்குரிய தேர்வாளர்கள் பங்கேற்று வருகின்றனர்.

சலுகை மதிப்பெண் வழங்கி, தங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தேர்வர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, ஏற்கனவே நடைபெற்ற சான்றிதழ்சரிபார்ப்பின் போது பங்கேற்க முடியாதவர்களும், சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலாமல் போனவர்களுக்கும், வரும் 12-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் பங்கேற்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி நிறவடைந்ததும், ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.இ.டி., - 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது

ஆசிரியர் தகுதி தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.

இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும், 28 மையங்களில், வரும் 12ம் தேதி வரை, இப்பணி நடக்கிறது. 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து, தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால், தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரிபார்க்குமாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்
ஆசிரியர் நியமன வழக்குகளை விரைவாக முடிக்க வலியுறுத்தல்

மாணவர்கள் நலன் கருதி, ஆசிரியர் நியமன வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதுகலை தேர்வர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய ஆசிரியர் நியமனத்தை, குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற முடியாத நிலைமை, சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு தேர்வை நடத்தினால், அது தொடர்பாக, பல வழக்குகள், நீதிமன்றங்களில் தொடரப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நியமனமும், ஆண்டுக்கணக்கில் தள்ளிப்போகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பான வழக்குகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதுகலை ஆசிரியர் நியமன வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்னும் நிலுவையில் உள்ளன.அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,895 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில் தேர்வு நடத்திய போதும், இதுவரை, பணிநியமனம்நடக்கவில்லை. தமிழ் பாடத்திற்கு மட்டும், 625 பேர், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதர பாடங்களுக்கான நியமனம், வழக்குகளில் சிக்கி உள்ளது.

இதனால், வரும் கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. வழக்குகள் எப்போது முடியும், இறுதி பட்டியல் எப்போது வரும் என, தெரியாத சூழல் உள்ளது.

இது குறித்து, முதுகலை தேர்வர்கள் சிலர் கூறியதாவது:ஆசிரியர் நியமனவழக்குகளை, மாணவர்கள் கல்வி நலன் கருதி, விரைந்து முடிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, ஆசிரியர் நியமனத்தின் அவசியத்தை, உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி, வழக்குகளுக்கு, முன்னுரிமை அளித்து, விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
5% மார்க் தளர்வு அடிப்படையில் சான்று சரிபார்ப்பில் மீண்டும் வெயிட்டேஜ்

டிஇடி தேர்வில் அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நேற்று தொடங்கியது. டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கும் சதவீத அடிப்படை போட்டதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.டிஇடி தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து வெயிட்டேஜ் மதிப்பெண்களை நீதிமன்றம் ரத்து செய்தது.இதையடுத்து 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேருக்கு நேற்று சான்று சரிபார்ப்பு தொடங்கியது. மொத்தம் 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று மாவட்ட வாரியாக மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரிகள் ஒவ்வொரு மையத்துக்கும் வரவழைக்கப்பட்டனர்.

சான்று சரிபார்ப்பு மையத்தில் அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரு படிவம் வழங்கப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் ஆகிய படிப்புகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களை தனித் தனியாக அந்த படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றுக்கு தனித்தனியே சதவீதம் குறிப்பிட்டு வாங்கினர்.மேலும், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் போடக்கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், டிஇடி தேர்வில் பட்டதாரிகள் பெற்ற மதிப்பெண் ணுக்கு சதவீத அடிப்படை யில் மதிப்பெண் வழங்கியுள் ளனர். அதாவது 88 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு 59 மதிப்பெண் போட்டுள்ளனர். வெயிட்டேஜ் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அனைத்து மதிப்பெண்களுக்கும் சதவீதம் போட்டு வாங்கியதுடன், டிஇடி தேர்வு மதிப்பெண்ணுக்கும் சதவீதம் போட்டு மொத்தம் 100 பெற வேண்டும் என்று மீண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் குழப்பியதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர். இதனால் பலர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tuesday, May 6, 2014

செமஸ்டர் வாரியான மார்க் பட்டியல் அவசியமா?ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி விளக்கம்--- தி இந்து நாளேடு 

ஆசிரியர் தகுதித்தேர்வில் பட்ட தாரி ஆசிரியர்கள் கூடுத லாக 24,650 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று 
தொடங்கி 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

அதில் பட்டப் படிப்புக்கான ஒட்டு மொத்த மதிப்பெண் சான்றிதழுடன் செமஸ்டர் வாரியான மதிப் பெண் சான்றிதழ்களும் கேட்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது-தேர்வர்கள் 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு படித்துள்ளார்களா? என்பதை ஆய்வுசெய்வே செமஸ்டர் வாரியான மதிப்பெண் பட்டியல்களை சமர்ப்பிக்கச் சொல்லி யுள்ளோம். ஒருவேளை அவை இல்லாவிட்டால் அதுதொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு தேர்வர்கள் உரிய பதில்அளிக்க வேண்டும். எழுத்துப்பூர்வமாக உறுதிமொழியும் எழுதிகொடுக்க வேண்டியதிருக்கலாம்.செமஸ்டர் வாரியாக மதிப் பெண் சான்றிதழ்களை சமர்ப் பிக்காத காரணத்திற்காக யாரும் நிராகரிக்கப்பட்டு விடமாட்டார் கள். அதேபோல், சாதி சான்றிதழில் பெயரில் சிறுசிறு எழுத்துப்பிழைகள் இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் காரணமாக யாரும் நிராகரிக் கப்பட மாட்டார்கள்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Monday, May 5, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
29 மையத்தில் டிஇடி சான்று சரிபார்ப்பு

டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்று சரிபார்ப்பு இன்று தமிழகத்தில் 29 மையங்களில் நடக்கிறது. கடந்த ஆண்டுக்கான டிஇடி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. இதையடுத்து பிப்ரவரி மாதம் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் சுமார் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சான்று சரிபார்ப்பதற்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட் டன. 

அவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டது. இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் வந்ததை அடுத்து சான்று சரிபார்ப்பு நடத்துவது தள்ளிப் போனது. இன்று 29 மையங்களில் சான்று சரிபார்ப்பு வழக்கம் போல காலை 9 மணி முதல் நடக்கிறது

Sunday, May 4, 2014

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013- PAPER II

CLICK HERE FOR PAPER II CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

http://111.118.182.232:92/cvcallletter.aspx
TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013- PAPER II

CLICK HERE FOR CERTIFICATE VERIFICATION CENTRE LIST FOR PAPER II

http://trb.tn.nic.in/TET2013/21042014/CV%20Center%20for%20Paper%20II.pdf
TNTET -2013 PAPER-1 & PAPER- II

CLICK HERE FOR PAPER I DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS

http://trb.tn.nic.in/TET2013/26022014/WebSite2/Paper1.htm
TNTET -2013 PAPER-1 & PAPER- II

CLICK HERE FOR PAPER I DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS

http://trb.tn.nic.in/TET2013/26022014/WebSite2/Paper1.htm
TNTET -2013 PAPER-1 & PAPER- II

CLICK HERE FOR PAPER II DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS

http://trb.tn.nic.in/TET2013/26022014/WebSite2/Paper2.htm
TNTET -2013 PAPER-1 & PAPER- II

CLICK HERE FOR PAPER II DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS

http://trb.tn.nic.in/TET2013/26022014/WebSite2/Paper2.htm
திருச்சி: ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ் நாளை (மே 6) சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாளை தொடங்குகிறது ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள் 2) வென்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (மே 6) திருச்சி வாசவி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதிóத் தேர்வில் (தாள் 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் மே 6 தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சி, கரூர், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ழவிகாட்டுதல்களின்படி மேற்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. செல்வகுமார் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை இந்த முகாமுக்காக 40 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Saturday, May 3, 2014

பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு
'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், 150க்கு 90 மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர். பின், தேர்ச்சி பெற 82 மதிப்பெண்ணாக குறைத்து தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,17 மற்றும் 18 ல் நடந்த, டி.இ.டி., தேர்வுகளில் மட்டும் 72 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். இதில், தாள் 2ல், தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. ஆனால், காலிப் பணியிடங்கள் 16 ஆயிரம் மட்டுமே உள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. இதனால், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வாய்ப்பு என்பது சாத்தியமில்லை. ஆனால், அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம் என பாட வாரியான காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் டி.இ.டி., தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை, விவர பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இந்த விவரம் தெரிந்தால் தான், டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு, எப்போது பணி நியமனம் கிடைக்கும், என அவர்களால் தெரிந்துகொள்ள முடியும். இது தெரியாமல் தற்போது, டி.இ.டி. தேர்ச்சி பெற்றிருந்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பல லட்சம் ரூபாய் 'பேரம்' பேசப்படும் நிலை உள்ளது.
இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இடஒதுக்கீடு அடிப்படையிலான காலிப் பணியிடங்கள் மற்றும் பாட வாரியான டி.இ.டி., தேர்ச்சி விவரப் பட்டியலை வெளியிட வேண்டும், என்று தேர்ச்சி பெற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்களின் பாட வாரியான தேர்ச்சி விவரம், அரசு அறிவித்துள்ள காலிப் பணியிடங்களில், பாட வாரியான காலியிடங்களின் விவரத்தை வெளியிட்டால் தான், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளிப்படை தன்மை தெரியும், என்றார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டம் அமல்படுத்தியபின் ஆசிரியர் தகுதித் தேர்வை அனைத்து மாநிலங்களும் கட்டாயமாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மூன்று முறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்திய நிலையில் 2012ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பெரும்பாலானோர் ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றுவிட்டனர். 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 5 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பல்வேறு வழக்குகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் வரும் மே மாதம் 6ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது. யாருக்கு வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் காலங்களில் மற்ற போட்டித் தேர்வுகளை போல அதிக மதிப்பெண் பெறுவோர்க்கு ஆசிரியர் பணி வழங்கும் நிலையை பரிசீலனை செய்ய வேண்டும்.
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட பல்வேறு தேர்வாணையங்களும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப முதல் மதிப்பெண் பெறுவோர்க்கு வாய்ப்பு வழங்குவது போல பணிநியமனம் வழங்கினார் பல குழப்பங்கள் தவிர்க்கப்படும்.
அதே போல ஆசிரியர் தேர்வு வாரியமும் தேர்ச்சி பட்டியல் தயாரித்து பணி நியமனம் வழங்க பரிசீலனை செய்ய ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்
பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு
மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்
அடுத்த தேர்வு TET எப்போது?

ஆண்டுக்கு, இரண்டு முறை டி.இ.டி., தேர்வை நடத்த, டி.ஆர்.பி., திட்டமிட்டு இருந்தது. 2012ல், இருமுறை தேர்வுகள் நடந்தன. 2013ல், ஒருமுறை தான் தேர்வு நடந்தது.கடந்த ஆண்டுக்கான தேர்வுப் பணிகளே, இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை முடித்து, இறுதி பட்டியல் வெளியிடுவதற்குள், மேலும் காலதாமதம் ஏற்படும்.வரும், மே 31ம் தேதியுடன், ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்களுக்கு சேர்த்து தான், தற்போது, 15 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். இனி, அடுத்த ஆண்டு, மே இறுதியில் காலியாகும் இடங்களை நிரப்ப வேண்டியது இருக்கும்.இதை கருத்தில் கொண்டு, வரும், செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.

Friday, May 2, 2014

புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண்
பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு
மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் அனைத்து கணக்கீட்டுக்கும் பொருந்தும் எனவே, அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணுக்கு தக்கவாறு கூடுதல் மதிப்பெண் பெறுவார்கள். உயர் நீதிமன்றத்தின் புதிய உத்தரவால், ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு புதிதாக சரிபார்ப்பு நடத்தப்படுமா, ஆசிரியர் நியமனம் தாமதம் ஆகுமா என்று கேட்டதற்கு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் மதிப்பெண் விவரம் எங்களிடம் உள்ளது. கணினி மூலம் அவர்கள் அனைவருக்கும், புதிய முறையில் மதிப்பெண் கணக்கிட்டுவிடலாம். இதற்கு எவ்வித காலதாமதமும் ஆகாது. அவர்களின் புதிய கட் ஆப் மதிப்பெண் ஆசிரிய தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

Thursday, May 1, 2014

TNTET வழக்கு தள்ளுபடி - ஜெயா+ செய்திகள்...
தமிழக அரசு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினர் தவிர்த்து மற்றவர்களுக்கு 5 சதவீதம் தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யபட்டுள்ளது. - ஜெயா+ செய்திகள்...
இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 5 சதவீதம் மதிப்பெண் குறைப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி என்பவர் தொடுக்கப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து நீதிபதி நாகமுத்து தீர்ப்பு வழங்கினார். மேலும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் உரிய வாய்ப்பு வழங்குவதற்காகவே இந்த மதிப்பெண் தளர்வினை தமிழக அரசு வழங்கியுள்ளது என்பதால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்ததாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்..
2012 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் 5 சதவீதம் மதிப்பெண் தளர்வு குறித்து வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட வழக்கில் ”இது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது” என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்.
மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் தளர்வு வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என தொடரப்பட்ட வழங்கில் இது குறித்து வழக்கு தொடர்வதற்கு உரிய முகாந்திரம் இல்லை என கூறி அதனையும் தள்ளுபடி செய்தார்
TNTET - 5% மதிப்பெண் தளர்வினை 2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும்
TET ஆசிரியர் தேர்வில், 2013 தேர்வுக்கு அரசின் 5 மதிப்பெண் சதவீத தளர்வு செல்லும்.2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும், என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்,தகுதி தேர்வைநடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60சதவீதம்பெற வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்காக 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்த 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. 5 சதவீத மதிப்பெண்தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும்,சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை, 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து, மதிப்பெண் தளர்த்துவதில்,கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே, அரசு பரிசீலிக்கவில்லை எனக்கூற முடியாது.
தகுதி தேர்வு, போட்டி தேர்வு அல்ல; அது, தகுதி பெறுவதற்கான தேர்வு.மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள, ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம்.இடஒதுக்கீடு பிரிவினருக்காக, தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு, அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்படவில்லை.
எனவே, 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை, 2012ல் நடந்த, ஆசிரியர்தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்தினால்,குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.