Friday, October 28, 2016

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம்; புதிய அரசாணை எதிர்பார்ப்பு!

பணியில் உள்ள ஆசிரியர்கள்தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம்நவம்பரில் முடிவதால்கால அவகாசத்தை நீட்டித்துஅரசாணை வெளியிட வேண்டும் எனஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில், 2011ல்ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது. இதன்படிஅரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக சேரஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனஅரசு உத்தரவிட்டது. 
அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், 2011க்கு பின் நியமனம் செய்யப்பட்டவர்களும்ஆசிரியர் தகுதித்தேர்வை முடிக்க வேண்டும் எனதமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம்வரும் நவம்பருடன் முடிகிறது. 
ஆனால்ஆசிரியர் தகுதித்தேர்வில்இட ஒதுக்கீடு சலுகை வழங்குவது தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குபல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதனால்புதிதாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. 
அடுத்த மாதத்தில் அவகாசம் முடிவதால்ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்தங்கள் வேலை பாதிக்கப்படுமோ எனகவலையில் உள்ளனர்.
இது குறித்துதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர்பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: 
ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்துதமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்காததால்பல இடங்களில்தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. 
எனவேஆசிரியர் தகுதித் தேர்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை, 2020 வரை நீட்டித்துஅரசாணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment